காமராஜர் வீழ்த்தப்பட்டதற்கு திமுகவே காரணம்.. மானமுள்ள காங்கிரஸ் கட்சி இனியும் கூட்டணியில் தொடர வேண்டுமா? அண்ணாமலை அட்டாக்..

annamalai

காமாராஜர் சர்ச்சைக்கு மத்தியில் மானமுள்ள காங்கிரஸ் கட்சியினர் இனியாவது திமுக கூட்டணியில் வெளியேற தயாரா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ காமராஜர் என்ற அற்புதமான ஆட்சியாளர் வீழ்த்தப்பட்டதற்கு திமுகவே காரணம்.. எவ்வளவு பொய்களை சொல்லி காமராஜரை வீழ்த்தினர்.. கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு 1 சதவீதம் கூட அருகதை இல்லை.. கருணாநிதி பேசியதை எல்லாம் இன்று எடுத்து காண்பித்தால், மானமுள்ள ஒரு காங்கிரஸ் தொண்டர் கூட திமுக கூட்டணியில் இருக்க மாட்டார்கள்..


எம்பியாக இருக்கும் திருச்சி சிவா ஒருபடி மேலே போய் பேசி உள்ளார்.. கடைசி காலம் வரை எந்த ஒரு சொத்தை சேர்க்கதாவர்.. எளிமையாக வாழ்ந்தவர்.. தனது வீட்டிற்கு தண்ணீர் குழாய் கூட வேண்டாம் என்று மறுத்தவர்.. இப்படிப்பட்ட மனிதர் ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்று திருச்சி சிவா பேசிய வன்மையாக கண்டிக்கத்தக்கது.. காமராஜர் தனது கடைசி காலக்கட்டத்தில் கருணாநிதியின் கையை பிடித்துக் கொண்ட உங்களை போன்ற ஒப்பற்ற தலைவர் இல்லை என்று சொன்னார் என்பதெல்லாம் பொய்.. திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று கூறியவர் தான் காமராஜர். அவர் கலைஞரை கருணாநிதியை அழைத்து தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை.. தமிழகத்தின் வரலாற்றை அழித்ததில் திமுகவிற்கு முக்கிய பங்கு உள்ளது.. வரலாற்றை மாற்றி, காமராஜர் இல்லாத போது ஒரு புதிய விஷயத்தை சொல்லி மக்களை குழப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன்.. மானம் இருக்கும் காங்கிரஸ் இதை பார்த்துக் கொண்டிருக்கிறடா?

காமராஜர் ஆட்சி வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்றனர்.. மானமுள்ள காங்கிரஸ் கட்சியினர் இனியாவது திமுக கூட்டணியில் வெளியேற தயாரா? இன்னொரு கூட்டணிக்கு கூட செல்ல வேண்டாம்.. குறைந்தபட்சம் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட தயாரா? காமராஜரை தாண்டி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடையாளம் கிடையாது.. அப்படிப்பட்ட ஒரு தலைவரை அசிங்கப்படுத்திய பிறகு கூட்டணியில் நீங்கள் தொடர வேண்டுமா? என்ற கேள்வியை சாமானிய மக்களும் முன் வைக்கின்றனர்..” என்று தெரிவித்தார்.

Read More : காமராசர் மறைந்து அரை நூற்றாண்டாகியும் களங்கப்படுத்தும் திமுக.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

English Summary

Amid the Kamarajar controversy, are the honorable Congress members ready to leave the DMK alliance at any time? Annamalai has raised the question.

RUPA

Next Post

அடுத்த முறை அமித்ஷா தமிழகம் வந்தால் அதிமுக இரண்டாக உடையும்.. அடித்து சொல்லும் திமுக முக்கிய புள்ளி..

Thu Jul 17 , 2025
DMK's organizing secretary R.S. Bharathi has said that the next time Amit Shah comes to Tamil Nadu, the AIADMK will split into two.
deccanherald import sites dh files articleimages 2023 03 30 eps shah pti 1205076 1680189796

You May Like