Election date: இன்று அறிவிக்கப்படுகிறதா மக்களவை தேர்தல் தேதி?… எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரங்கள்!

Election date: இன்று அல்லது நாளைக்குள் மக்களவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட சில மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிகட்ட ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அண்மையில் ஜம்மு – காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தேர்தல் பணிக்கு தேவையான துணை ராணுவப் படைகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து மார்ச் 11, 12, 13-ம் தேதிகளில் ஜம்மு – காஷ்மீர் சென்ற இக்குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்தி உள்ளனர். அதனடிப்படையில், மக்களவைத் தேர்தல் தேதியை இன்று அல்லது நாளைக்குள் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு மார்ச்10-ம் தேதி மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, அந்த ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சுமார் 97 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Readmore:  தேர்தல் திருவிழா!… இன்று கூடுகிறது பிரதமர் மோடி தலைமையிலான குழு!

Kokila

Next Post

Delhi: இன்று விவசாயிகளின் மகா பஞ்சாயத்து!… அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுக்க திட்டம்!

Thu Mar 14 , 2024
Delhi: டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்துவதற்காக திரண்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா எல்லையில் நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் முன்னேற முயன்று வருவதால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 21 வயது இளைஞரான சுப்கரன் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் இரண்டு நாட்கள் பேரணிக்கு செல்லும் திட்டத்தை […]

You May Like