கரகாட்டக்காரன் புகழ் கனகாவா இது..? உடல் எடை அதிகரித்து இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!!

பிரபல நடிகை கனகாவை நடிகை குட்டி பத்மினி சந்தித்து பேசியதாக தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை கனகா. கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு ரஜினி, விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தற்போது அவர் ஒரு பாழடைந்த வீட்டில் குடியிருந்து வருவதாகவும், யாரையும் சந்திப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில், 1989ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான படம் கரகாட்டக்காரன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த தேவிகாவின் மகளான இவர், கார்த்திக், ரஜினிகாந்த், விஜயகாந்த், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் இருந்து விலகி தற்போது தனியாக பாழடைந்த வீட்டில் வசித்து வருகிறார். திரையுலகில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல் இருக்கும் நடிகை கனகாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

Chella

Next Post

இளைஞர்களே அசால்ட்டா இருக்காதீங்க..!! ஆண்டுக்கு ஒரு முறையாவது இதை பண்ணுங்க..!!

Mon Nov 27 , 2023
இளைஞர்களிடையே சிறுநீரக பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆண்டுக்கு ஒருமுறை அனைவரும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தற்போது தொற்று நோய்களின் தாக்கம் தீவிரமாக உள்ளது. குறிப்பாக சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், உரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது உயிருக்கே ஆபத்தை உருவாக்கும். சமூகத்தில் […]

You May Like