பசங்க படத்தில் நடித்த குட்டி பையனா இது..? கல்யாணமே ஆகிடுச்சு..!! பொண்ணு யாருனு பாருங்க..

Sriram Marriage 1 1

“பசங்க” திரைப்படத்தில் ஜீவா கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஸ்ரீராம்க்கு நேற்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.


2009 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம். அந்த திரைப்படத்தில் ஜீவா கேரக்டரை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து இருக்க முடியாது. வில்லத்தனம் கலந்த மாணவனாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

முதல் திரைப்படத்திலேயே ஸ்ரீராமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து தமிழ் படம், தீராத விளையாட்டுப் பிள்ளை, வேங்கை, ஜில்லா ஆகிய திரைப்படங்களில் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படங்கள் அவருக்கு பெரிதளவில் கை கொடுக்கவில்லை என்றாலும் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கோலி சோடா’ திரைப்படம் ஸ்ரீராமுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

இதனை அடுத்து கமலஹாசனின் பாபநாசம், சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை, ஸ்ட்ரீட் லைட் முதலிய படங்களில் நடித்தார். மேலும் நவரசா, ஃபை, முதலிய வெப் சீரியஸ்களிலும் நடித்து இருந்தார். பயோடெக் கம்பெனி ஒன்றின் உரிமையாளராக இருக்கும் ஸ்ரீராம், அங்கு பணிபுரிய வந்த நிகில் பிரியாவுடன் ஏற்பட்ட பழக்கத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் எளிமையான முறையில் நேற்று திருமணம் நடந்த் முடிந்தது.

அவர் தன்னுடைய திருமண புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிந்திருக்கிறார். இவருடைய திருமணத்திற்கு சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Read more: தலை முதல் பாதம் வரை 18 இடங்களில் காயம்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்..!! சிவகங்கை லாக்அப் டெத்…!

Next Post

கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் இவர் தான்! சித்தராமையா நீக்கம்? காங்கிரஸ் முக்கிய முடிவு..

Mon Jun 30 , 2025
As talks are underway to change the Chief Minister in Karnataka, Congress leader Mallikarjun Kharge has said that the party leadership will take a decision on the matter.
Kharge Siddaramaiah 2025 06 f7bb02e5eb979cba085671b838bc095d 16x9 1

You May Like