டெங்கு நோயை ஏற்படுத்தும் ஏடிஸ் எகிப்டி ((Aedes Aegypti)) கொசு உடலின் வெப்பத்தை உணரும் திறன் மூலம் மனிதர்களைக் கடிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றங்கள் மனிதர்களை ஆச்சரியப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில், டெங்கு நோயை ஏற்படுத்தும் ஏடிஸ் எகிப்டி கொசு மனிதர்களை கடிக்கும் இரகசியம் பற்றிய புதிய கண்டுபிடிப்பு தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய ஆய்வுகளில், ஏடிஸ் எகிப்டி கொசு மனிதர்களை முகர்ச்சி திறன் மூலம் அடையாளம் கண்டறிந்து கடிக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.
அதனைக் கொண்டு, அந்த முகர்ச்சி திறனை உருவாக்கும் மரபணுவை (gene) நீக்கி விஞ்ஞானிகள் புதிய ஆய்வை நடத்தினர். அதிர்ச்சி என்னவென்றால் முகர்ச்சி திறன் இல்லாத கொசுக்களும் மனிதர்களை கடித்தன. அதன் அடிப்படையில், கொசுக்கள் மனித உடலின் வெப்பத்தை உணர்ந்து கடிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
முகர்ச்சி திறன் நீக்கப்பட்ட நிலையில் கூட, வெப்பத்தை உணரக்கூடிய தன்மையால் அவை தனது இலக்கைத் தேர்வு செய்துவிடுகிறது. இது, டெங்கு போன்ற நோய்களைத் தடுப்பதற்கான முயற்சியில் புதிய பாதையை உருவாக்க கூடியதாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். டெங்கு வைரஸ் தாக்கும்போது, உடலில் ஆண்டிபாடிகள் (antibodies) உருவாகின்றன. சில ஆண்டிபாடிகள் தடுப்புச் சக்தியை கொடுக்கும்.
ஆனால், சில நோயை தீவிரமாக்கும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. இந்தப் பிணைக்கப்பட்ட டி செல்கள் மற்றும் ஆண்டிபாடிகள் குறித்த தெளிவான புரிதல் கிடைத்தால், மிகவும் பயனுள்ள டெங்கு தடுப்பூசியை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள், எதிர்காலத்தில் டெங்கு தடுப்பூசி உருவாக்கத்தில் ஒரு புதிய புரட்சிக்கு வித்திடும் என உலகளாவிய மருத்துவச் சமூகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: விஜய் போடும் மாஸ்டர் பிளான்.. டெல்டாவில் இருந்து சுற்றுப் பயணம் ஆரம்பம்..!! பரபரக்கும் அரசியல் களம்