சமூக ஊடகங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இரவு ராஜினாமா செய்ய உள்ளார் என்ற ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ட்ரம்ப் ராஜிநாமா செய்தால் பதவி ஏற்கும் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் உடனடியாக ட்ரம்ப்க்கு மன்னிப்பு வழங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன…
இந்த தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்படாத, நம்பகத்தன்மை இல்லாத சமூக ஊடக கணக்குகளிலிருந்து வந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். X தளத்தில் பலரும் ஒரே வதந்தியை பரப்பி வருகின்றனர். ஒரு பயனர், “ட்ரம்ப் இன்று இரவு ராஜினாமா செய்கிறார், உடனே ஜே.டி. ட்ரம்ப் அவருக்கு மன்னிப்பு வழங்கப் போகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “ட்ரம்ப்பின் இறுதி திட்டம்: மேக்ஸ்வெல்லுக்கு மன்னிப்பு; உடல்நலக் காரணங்களால் ராஜினாமா; பின்னர் வான்ஸ் டிரம்புக்கு மன்னிப்பு வழங்குவார்” என்று பதிவிட்டார்.
மூன்றாவது ஒருவர், “என்ன செய்கிறீர்கள்? ட்ரம்ப் இன்று இரவு ராஜினாமா செய்து, வாந்ஸ் அவருக்கு மன்னிப்பு தருவாரா…?” என்று கேள்வி எழுப்பினார். இவை அனைத்தும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் சரிபார்க்கப்படாத கூற்றுகள் என்பதை குறிப்பிட வேண்டும்.
எப்ஸ்டீன் (Epstein) கோப்புகள் மற்றும் டிரம்பைச் சுற்றிய சர்ச்சை
டொனால்ட் ட்ரம்ப் பதவி விலகப் போகிறார் என்ற வதந்திகள் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள். அமெரிக்காவில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி தான் எப்ஸ்டீன் .. அவர் தொடர்பான புதிய மின்னஞ்சல்கள், குறிப்புகள், தொடர்புகள் வெளியானது அரசியல் உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
சில மின்னஞ்சல்களில், எப்ஸ்டீன் “ டொனால்டின் ‘அழுக்கு ரகசியங்கள்’ என எனக்கு தெரியும்) என்று எழுதியிருந்ததும்,MAGA (Trump supporters) வட்டாரங்களில் பதட்டம் ஏற்படுத்தியுள்ளது.
இவை வெளிவந்த நிலையில், ட்ரம்ப் மீது புதிய அழுத்தங்கள் உருவாகியிருப்பதால் சில சமூக ஊடக குழுக்கள் “அவர் ராஜிநாமா செய்யலாம்” என யூகிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் இவை அனைத்தும் வதந்திகளே, உண்மையான அரசியல் முடிவுகளோ அல்லது அதிகாரப்பூர்வ சுட்டுமொழிகளோ எதுவும் இல்லை.
மார்ஜோரி டெய்லர் கிரீன் (Marjorie Taylor Greene) போன்ற நீண்டகால குடியரசு கட்சியினர் எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில், இந்தப் பிரச்சாரத்தை முழுவதும் ‘டெமோகிராட்களின் சூழ்ச்சி’ (Democrat hoax) என்கிற தனது நிலைப்பாட்டில் டொனால்ட் டிரம்ப் இன்னும் உறுதியாக உள்ளார்.
இதனிடையே, எப்ஸ்டீன் மற்றும் பில் கிளிண்டன் உட்பட பிறருடன் இருந்த தொடர்புகளை விசாரிக்க நீதித்துறை துறையிடம் (Department of Justice) கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதனை அட்டார்னி ஜெனரல் பாம் பாண்டி (Pam Bondi) ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ட்ரம்ப் தனது மார்ஜோரி டெய்லர் கிரீனுக்கு வழங்கிய ஆதரவை (endorsement) திரும்பப் பெற்றுள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடவும் வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க காங்கிரஸ் சபையில் (House) வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.இந்த விவகாரம் காரணமாக ட்ரம்ப் பதவி விலகலாம் என்ற கூற்றுகள் பரவி வந்தாலும், அது மிகவும் சாத்தியமற்றது என்றே கூறப்படுகிறது..
காரணம், மார்ஜோரி டெய்லர் கிரீனுடன் (MTG) தொடர்பை துண்டித்ததாக அறிவித்த பதிவில், ட்ரம்ப் அரசு (Republican Trump government) சாதித்த பல செயல்களை – குறிப்பாக, உலகம் முழுவதும் பல போர்களைத் தடுக்க முடிந்தது என்ற தனது கூற்றையும் – மிக விரிவாகப் பதிவு செய்திருந்தார்.
அந்த உரையில், அவர் தனது ஆட்சியின் செயல்களைப் பற்றி பெருமை கொள்வது தெளிவாகத் தெரிகிறது. அதோடு, அவர் பதவி விலகலாம் என எந்த ஊடகமும் எந்த தகவலையோ வெளியிடவில்லை. இதனைப் பார்க்கும்போது, ட்ரம்ப் ராஜினாமா செய்யப் போகிறார் என்ற வைரல் கூற்றுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது..



