பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் விஜய்யின் அரசியல் ஆபத்தானது என்று கூறியுள்ளார்.. பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ விஜய் ஒரு தனிப்பட்ட நபராக ஆபத்தானவர் இல்லை.. அவர் ஒரு தனிநபராக அமைதியாக இருப்பார், யாரிடமும் பேசமாட்டார். திரையுலகில் அவர் அமைதியானவர்.. ஆனால் அவர் அரசியலுக்கு வரும் போது ஆபத்தானவர்.. ஒரு தலைமைப் பொறுப்பேற்று வருகிறார்.. நடிகராக இருக்கும் தனக்கு கிடைத்த செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்தி, நான் தமிழ்நாட்டிற்கு முதல்வராக வருவேன் என்று விஜய் கூறுவது ஒரு ஆபத்தான எண்ணம்..
ஒரு இடத்தில் கிடைத்த செல்வாக்கை இன்னொரு இடத்தில் பயன்படுத்த நினைப்பது ஆபத்தான சிந்தனை. விஜய் ஒரு தகுதியான தலைவனா என்பது இவ்வளவு சீக்கிரம் தெரியாது..
விஜய்க்கு அரசியலை பற்றி எதுவுமே தெரியாது.. இதுவரை ஆண்ட கட்சிகளால் தமிழ் மக்களுக்கு இதெல்லாம் சரியாக செய்யப்படவில்லை.. இதை செய்ய வேண்டும். இதை செய்வதற்கு இது தான் வழி என்று சொன்னால் தான் அவர் தலைவன்.. அதற்கு நாம் அவருக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டு.. அதற்கு 5 முதல் ஆண்டுகளாவது தேவை.. அவர் முதலில் முழு அரசியலில் செயல்படட்டும்.. இவருக்கு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவரா என்பது தெரியவரும்..
விஜய்க்கு எதுவும் தெரியாது என்பதால் தன்னை சுற்றி இருப்பவர்களின் பேச்சை கேட்டு நடக்கிறார்.. தன்னை சுற்றி இருப்பவர்களின் 4 பேரை கேட்டு நடப்பது ஆபத்து தானே.. இதில் பலியாகப் போவது மக்கள்..
விஜய் இன்னும் தன்னை நடிகராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். நடிக பிம்பத்தை உடைக்க விரும்பவில்லை.. அதனால் தான் காவல்துறை, அரசு மீது புகார் கூறி வருகிறார்..
அரசியல் என்பது மக்கள் சேவை தான்.. முதலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.. எடுத்த உடனே நான் தான் முதல்வர் என்று பேசினால் அதிகார வேட்கை தானே உங்களில் நோக்கமாக உள்ளது.. மக்களோ, சேவையோ விஜய்க்கு முக்கியமில்லை என்பதை அவர் வெட்ட வெளிச்சமாக காட்டுகிறார்..
நடிகர் என்ற மாஸ்க்கை கழட்டி, விஜய் களத்தில் இறங்க வேண்டும்.. நடிகராக இருக்கும் புகழை வைத்துக் கொண்டு முதல்வராகி விடலாம் என்று அவர் நினைக்கிறார்.. பொது சேவைக்கு இப்படி நீங்கள் வர முடியாது..
41 பேர் பலியான கொடுமையை வார்த்தைகளால் விவரிக்க வேண்டும்.. 41 குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.. மனசாட்சி உள்ள நபர் என்றால், நான் அரசியலைவிட்டு விலகுகிறேன் என்று சொல்லி இருக்க வேண்டும்.. முதலில் நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.. இவர் மீது குற்றமே இல்லாத மாதிரி அரசு மீது காவல்துறை மீதும் குற்றம்சொல்லி வருகிறார்.. விஜய் எல்லாம் ஒரு மனுஷனா? இந்தளவுக்கு மனசாட்சி இல்லாமல் இப்படி ஒருத்தர் இருக்க முடியாது.. இதெல்லாம் அதிகார வேட்கை..
எப்படியாவது அடுத்தவர்கள் மீது பழி சுமத்தி இளைஞர்களை ஏமாற்றி, கொஞ்சம் கூட பொறுப்பேற்காமல் அடுத்த பிரச்சாரத்திற்கு செல்வது என்பது மோசமான செயல்.. இதற்கு பிறகும் அவருக்கு வாக்களிக்க சென்றால் அவர்கள் அனைவரும் தவறானவர்கள்.. அவர்கள் வீட்டில் சரியாக வளர்க்கப்படவில்லை.. அல்லது இவர்கள் சுய சிந்தனை இல்லாமல் வளர்ந்துள்ளனர்..” என்று தெரிவித்தார்..
Read More : விஷால் திவாலானவர் என அறிவிக்க தயாரா? தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்..!



