கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.
இதை தொடர்ந்து விஜய் 2-வது முறையாக இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.. அவரிடம் காலை 11 மணியில் இருந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை சற்று முன்பு முடிவடைந்தது.. இந்த விசாரணையில், 7 மணி நேரம் தாமதமானது ஏன்? கூட்ட நெரிசல் பற்றி தெரியாதா உள்ளிட்ட கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினர்..
எனினும் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது காவல்துறை தான், போலீசாரின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே வாகனத்தை இயக்கியதாகவும் விஜய் கூறியுள்ளார்.. அதாவது வாகனம் எங்கு, எப்படி செல்ல வேண்டும் என காவல்துறை வழங்கிய வழிகாட்டுதலை பின்பற்றி தான் நடந்து கொண்டோம் என விஜய் பதிலளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த முறை விசாரணையின் போது கரூர் கூட்ட நெரிசலில் சதி நடந்திருப்பதாகவும், சிபிஐ தான் அதனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று விஜய் கூறியிருந்தார்.. தற்போது மீண்டும் காவல்துறை மீது புதிய குற்றச்சாட்டை விஜய் சுமத்தி உள்ளார்..
பிப்ரவரி முதல் 2-வது வாரத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஒருவேளை விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டால் அது விஜய்க்கு பெரும் பின்னடைவாக இருக்கும்..
இந்த நிலையில் விஜய்யிடம் சிபிஐ நடத்திய விசாரணை தொடர்பாக பல தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்று தவெகவின் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும் “ நாளை விஜய் ஆஜராக சம்மன் இல்லை.. இன்றுடன் விசாரணை முடிந்துவிட்டது.. திமுக சார்ந்த ஊடகங்கள் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர்.. குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்படும் என்று சில ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புகிறது..
விஜய் குறித்தும், தவெக நிர்வாகிகள் குறித்தும் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.. கிளி ஜோசியத்தில் கூறுவது போல் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.. விஜய் கைது செய்யப்படுவார் என்பது போன்ற தகவல்களை சில ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.. இந்த தகவல்கள் எல்லாமே பொய்.. ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் ந்டந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்..
Read More : Flash : 5 மணி நேர விசாரணை நிறைவு..! சிபிஐ-யிடம் மீண்டும் காவல்துறையை குற்றம்சாட்டிய விஜய்..!



