குளியலறையில் தினமும் நிறைய தண்ணீர் பயன்படுத்தப்படுவதால், கதவின் கீழ்பகுதி தொடர்ந்து ஈரப்பதத்தை உறிஞ்சி மெதுவாக உடைந்து போகும். இதனால் பல வீடுகளில் அரை கதவு போல உடைந்த நிலையில் காணப்படும். இந்த நீண்டநாள் பிரச்சனைக்கு எளியதும், குறைந்த செலவில் செய்யக்கூடிய பல தீர்வுகளை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
* குளியலறை கதவுகள் தண்ணீரால் சேதமடைவது அதிகம். இதை தவிர்ப்பதற்காக இப்போது சந்தையில் கிடைக்கும் Plastic Paint-ஐ பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 2–3 அடுக்குகள் பேயிண்ட் போடுவது கதவை முழுமையாக தண்ணீரில் இருந்து பாதுகாக்கும். பல வருடங்கள் சேதமடையாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
* கதவின் நடுவில் உடைவு அல்லது துளை ஏற்பட்டால் சுண்ணக்கட்டி அல்லது MCL (புட்டி) வைத்து மூடுவது கதவை மீண்டும் வலிமையாக்கும்.
* தண்ணீரால் மரக்கதவு ஊறாமல் இருக்க க்ரீஸ் ஆயில் அல்லது அடர்த்தியான எந்த எண்ணெயையும் தடவலாம். மேலும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை வார்னிஷ் அடித்தால் தண்ணீர் தாக்கம் 80% வரை குறையும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
* கதவுகள் தண்ணீரால் சேதமடையாமல் இருக்க பலர் உட்புறம் டின் ஷீட்டைப் பொருத்துகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் தண்ணீர் வாசலில் நிற்காமல், தண்ணீர் முழுவதும் கீழே பாயும்.
* குளியலறை ஈரப்பதத்தால் மரக்கதவுகள் அடிக்கடி சேதமடைகின்றன. இதைத் தவிர்க்க PVC/Plastic doors அல்லது Aluminium doors பரிந்துரைக்கப்படுகின்றன. நீண்ட நாள் நெகிழ்வில்லாமல் பயன்படுத்த முடியும்.
* ஒவ்வொரு 6 முதல் 12 மாதங்கள் இடைவெளியில் குளியலறையின் கதவுகளை நன்கு வார்னிஷ் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், கதவின் வலிமை பராமரிக்கப்படும், மேலும் தண்ணீரின் தாக்கத்திலிருந்தும் காப்பாற்றப்படும்.
Read more: என்ன நடிப்புடா சாமி.. கணவனை போட்டு தள்ளிவிட்டு 5 வருடமாக நாடகமாடிய மனைவி..! சிக்கியது எப்படி..?



