தாம்பத்திய வாழ்வில் உங்கள் துணைக்கு ஈடுபாடு இல்லையா..? அப்படினா இந்த டிரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

Sex 2025

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரத்தனமான வாழ்வில், நாம் உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாலியல் ஆரோக்கியத்திற்கு கொடுப்பதில்லை. நீண்ட நேர வேலைப்பளு, தீராத மன அழுத்தம், போதிய தூக்கமின்மை மற்றும் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை பாலியல் ஆசை மற்றும் செயல்திறனை மெல்ல மெல்ல மழுங்க செய்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், மருந்துகளைத் தேடி ஓடுவதற்கு முன்னால் உங்கள் சமையலறையில் நீங்கள் செய்யும் சிறிய மாற்றங்கள் உங்கள் தாம்பத்திய வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.


சிப்பிகள் :

பாலியலை தூண்டும் உணவுகளில் சிப்பிகளுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. இதில் அபரிமிதமாக உள்ள துத்தநாகம் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தியைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. ஒருமுறை சிப்பிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், நம் உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் துத்தநாக அளவில் 291 சதவீதம் வரை எளிதாகப் பெற முடியும் என ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

பெர்ரி பழங்கள் :

ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, கருப்பு திராட்சை போன்ற பெர்ரி வகை பழங்களில் உள்ள ‘பிளாவனாய்டுகள்’ மற்றும் ‘ஆந்தோசயனின்கள்’ உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி, இந்தப் பழங்களைத் தொடர்ந்து உட்கொள்வதால் ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடுகள் சுமார் 14 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனை முறையான உடற்பயிற்சியுடன் இணைக்கும்போது இந்த நன்மைகள் 21 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

நட்ஸ் மற்றும் சாக்லேட் :

வால்நட், பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அமினோ அமிலங்கள் பாலியல் ஆசையையும், உச்சக்கட்டத்தின் தரத்தையும் மேம்படுத்தும் வல்லமை கொண்டவை. அதேபோல், 70 சதவீதத்திற்கும் அதிகமான காகோ (Cacao) கொண்ட டார்க் சாக்லேட் மனநிலையை உற்சாகப்படுத்துவதுடன், பிறப்புறுப்புப் பகுதிகளுக்கு ரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவுகிறது. இது பாலியல் செயல்திறனில் ஒரு நேர்மறையான மாற்றத்தை உருவாக்குகிறது.

முட்டை, மீன் மற்றும் புரத சத்துக்கள் :

முட்டை, சால்மன் மீன் மற்றும் பருப்பு வகைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன் கட்டுப்பாட்டை வலுப்படுத்துகின்றன. இவை உடலுக்குத் தேவையான புரதத்தை அளிப்பதோடு, தாம்பத்திய உறவின் போது தேவைப்படும் ஆற்றலையும் அதிகரிக்கின்றன.

ஆனால், இந்த உணவுகள் மட்டுமே ஒரு அதிசயம் செய்துவிடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிர்த்து, தினமும் குறைந்தது 7 மணி நேரத் தூக்கம் மற்றும் சீரான உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளும்போது மட்டுமே பாலியல் ஆரோக்கியம் முழுமையடையும். பாலியல் ஆரோக்கியம் என்பது உங்கள் ஒட்டுமொத்த உடல்நலத்தின் ஒரு கண்ணாடி என்பதை உணர்ந்து செயல்படுவதே சிறந்தது.

Read More : பெண்களுக்கு ரூ.10,000, நகைக்கடன் தள்ளுபடி..!! தமிழக மக்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்..!! திமுக தேர்தல் அறிக்கை ரெடி..!!

CHELLA

Next Post

வாயில் எச்சி ஊற வைக்கும் மொறுமொறுப்பான குர்குரே.. ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்..! எப்படி தெரியுமா..?

Thu Dec 18 , 2025
Kurkure can be made easily at home..! Do you know how..?
home made Kurkure

You May Like