தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ தமிழகத்தில் புனிதமான ஆட்சியை விஜய் கொடுப்பார் என்று செங்கோட்டையன் கூறினார்.. இதைதொடர்ந்து அதிமுக ஆட்சி புனித ஆட்சி இல்லையா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன் “ ஜெயலலிதா ஆட்சியை புனிதமான ஆட்சி இல்லை என்று நான் கூறவில்லையே.. அதிமுக ஆட்சியை புனிதமான ஆட்சி இல்லை என்று கூறினேனா? நீங்கள் என்னை மடக்கி எனது கருத்துகளை திரித்து கூற வேண்டாம்..” என்று கூறினார்..
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன் “ அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என நான் கெடு விதிக்கவில்லை.. எனது பேட்டியை மீண்டும் ஒருமுறை கேளுங்கள்.. அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று தான் நான் கூறினேன்.. கெடு விதிக்கவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கும் எண்ணத்தில் நான் கெடு விதித்ததாக அவதூறு பரப்பினார்கள்..” என்று தெரிவித்தார்..
மேலும் திமுக செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்ததாக நேற்று தகவல் வெளியான நிலையில் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.. மேலும் “ திமுக, பாஜக, வேறு எந்த மாற்றுக் கட்சிகளில் இருந்து யாரும் என்னை அணுகவில்லை..” என்று கூறினார்..
சட்டைப் பையில் ஏன் ஜெயலலிதா படம் என்பது குறித்தும் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.. அப்போது “ இது ஜனநாயக கட்சி யார் படத்தை வேண்டுமானாலும் பையில் வைத்துக் கொள்ளலாமா.. நான் இன்றே படத்தை மாற்றி வைத்தால் உடனே மாறிவிட்டேன் என்று கூறுவீர்கள்.. இவரெல்லாம் என்ன தலைவர் ஒரே நாளில் படத்தை மாற்றி விட்டேன் என்று சொல்வீர்கள்.. யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.. இன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படமும், அண்ணா படமும் எப்படி அவரின் வண்டியில் வருகிறது.. இவர் வண்டியில் எப்படி வருகிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள்..” என்று தெரிவித்தார்..
Read More : “2026-ல் மாபெரும் மக்கள் புரட்சி உருவாகி, விஜய் வெற்றி பெறுவார்..” அடித்து சொன்ன செங்கோட்டையன்..!



