இஸ்ரேல் அட்டாக்..!! காஸாவில் இதுவரை 33,000 பேர் உயிரிழப்பு..!! சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..!!

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். அத்துடன், 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினர் காஸாவுக்குள் கடத்திச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல் – காஸா இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தெற்கு காஸா நகரான ராபாவில் நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு வீடுகள் தகர்க்கப்பட்டதாகவும், 3 குழந்தைகள், 2 பெண்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் கூறுகின்றன. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 33,037 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும், 75,668 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

Read More : தனியார் பள்ளிகளில் இலவச கல்வி..!! விண்ணப்பிப்பது எப்படி..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

Chella

Next Post

காலையில் பல் துலக்காமல் இருப்பது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் - மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!

Thu Apr 4 , 2024
ஒருவர் பற்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார் என்பதற்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. பல் துலக்காமல் இருப்பது வாய் ஆரோக்கியத்தை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என சமீபத்தில் பல் மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதனால் இதயநோய், நீரிழிவு நோய், புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். அமெரிக்காவில் உள்ள fred hutchinson புற்றுநோய் மையத்தின் ஆராய்சியாளர்கள் இதுகுறித்து […]

You May Like