மாணவர்களே எல்லாம் ரெடியா இருங்க…! செப்டம்பர் 1-ம் தேதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகும்…! எப்படி பார்ப்பது…?

இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில்; இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி www.unom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 5-ம் தேதி முதல் 14 வரை ரூ.300 ரூபாய் வரைவு காசோலையுடன் The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15-ம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6-வது செமஸ்டரில் ஒரு தாள் மற்றும் அரியர் வைத்துள்ள இளநிலை மாணவர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும். முதுகலை மாணவர்கள் 4-வது செமஸ்டர் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கும் எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று விநாயகர் சதுர்த்தி.. பூஜை செய்ய உகந்த நேரம் எது..? முழு விவரம் இதோ..

Wed Aug 31 , 2022
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி அன்றே விநாயகர் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.. எனவே அந்த சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.. ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி வந்தாலும், ஆவணி மாதத்தில் வரும் ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.. விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறை, சிலை வாங்கும் நேரம் & […]

You May Like