களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது என்று சீமான் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது “ இந்த நாட்டின் குடிமக்களுக்கு இருக்கும் மதிப்புமிக்க உரிமை வாக்குரிமை.. வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலை உள்ளது.. உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.. சிறப்பு வாக்காளர் திருத்தம் என்று சொன்னார்கள்.. 1 கோடி வாக்காளர்களை நீக்குவது எப்படி திருத்தமாகும்.. மிகு குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளனர்..
இந்த 1 கோடி பேர் எப்படி குறுகிய காலத்தில் எப்படி பதிவு செய்ய முடியும்..? இது அதிகாரத்தின் பொறுப்பற்ற செயல்.. அன்று வாக்காளர்கள் தங்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்தனர்.. இன்று ஆட்சியாளர்கள் தங்கள் வாக்காளர்களை தேர்வு செய்கின்றனர்.. அது தான் கொடுமையாக உள்ளது..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ வாக்கை பணம் கொடுத்து வாங்கும் நிலை இருக்கும் வரை பணநாயகம் தான் இருக்கும்.. ஜனநாயகம் இருக்கும்.. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் ஏற்கிறதா? வாக்குக்கு பணம் கொடுத்தால் தேர்தலில் நிற்க 10 ஆண்டுகள் தடை என்று அறிவித்தால் இது முடிவுக்கு வரும்.. ஆனால் நீங்கள் பறக்கும் படை, பரதேசி படை என்று போட்டால் ஒன்றும் மாறாது.. தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்தே தான் இது நடக்கிறது.” என்று தெரிவித்தார்..
அப்போது களத்தில் இல்லாதவர்களை பற்றி பேசமாட்டேன் என விஜய் கூறியது குறித்து இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த சீமான் “ களத்தில் யார் இன்று இருக்கிறார்கள்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும் தான் இருந்தது.. களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் நின்றவர் யார்? 2024 நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் கொள்கை எதிரியை வீழத்த விஜய் களத்திற்கு வராதது ஏன்? இந்த பேச்சை எல்லாம் கேட்டு சிரித்துவிட்டு கடந்து செல்ல வேண்டும்.. ” என்று தெரிவித்தார்..



