இந்த கோவிலில் மனிதர்கள் இரவில் தங்கினால் கல்லாக மாறிவிடுவார்களாம்..!! எங்க இருக்கு தெரியுமா..?

temple 1

இந்தியாவில் உள்ள பல வினோத கோவில்களில் ஒன்று தான் ராஜஸ்தானில் உள்ள கிராடு கோவில். இங்கு சிவனுக்கென்று ஐந்து கோவில்கள் உள்ளன. இந்தியாவின் சபிக்கப்பட்ட கோவில் என்றே இக்கோவில் குறிப்பிடப்படுகிறது. இந்த கோவிலின் சாபம் உண்மை தானா என்பதை ஆராய்ச்சி செய்யவும் இதுவரை யாரும் முன்வரவில்லை.


இந்தியாவில் எத்தனையோ பழங்கால கோவில்கள் உள்ளன. இவற்றில் எதன் வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் அதற்கு பின்னால் வரமோ, சாபமோ, பயங்கரமான கதையோ இல்லாமல் இருக்காது. அப்படி ஒரு சாபம் பெற்ற கதையை கொண்டது தான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்த கோவில். ராஜஸ்தானின் பாலைவனப்பகுதியான கிராடு என்ற பகுதியில் ஐந்து கோவில்கள் உள்ளன. இவற்றில் இரவு நேரத்தில் யாரும் தங்கக் கூடாது என்ற விதி உள்ளது. அப்படி மீறி தங்கினால் மனிதர்களாக இருப்பவர்கள் கல்லாக மாறி விடுவார்களாம்.

புராண கதைகளின்படி 12ம் நூற்றாண்டில் சோமேஸ்வர் என்ற மன்னரால் ஆட்சி செய்யப்பட்டது. அந்நிய படையெடுப்புகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த நாடு, தன்னுடைய செல்வச் சிறப்புகளை காத்திட, ஒரு பெரிய துறவியை அழைத்து சிறப்பு பூஜைகளை நடத்தியது. திரும்பிச் செல்லும் போது அந்த நாட்டின் வளத்தை பாதுகாக்கும் பொறுப்பை சீடரிடம் ஒப்படைத்து சென்றார்.

ஆனால் மக்கள் வறுமையை மறந்து செழிக்கத் தொடங்கியதும், துறவியின் சீடனை யாரும் நினைவில் கொள்ளவில்லை. நோய்வாய்ப்பட்ட அந்த சீடனை ஒரு குயவனின் மனைவியே கவனித்தாள். துறவி திரும்பி வந்ததும், மக்களின் அநுதாபமின்மையை உணர்து கோபம் கொண்டார். அவர் கொடுத்த சாபம் அந்த நாட்டு மக்கள் அனைவரும் கல்லாக மாறினர். மனிதர்கள் இல்லாத ஒரு இடமாக மாற அந்த ராஜ்யத்தை சாபமிட்டார்.

தனது சீடனை கவனித்துக் கொண்டதற்காக குயவனின் மனைவியை தவிர மொத்த ராஜ்யமும் கல்லாக மாற அவர் சாபம் அளித்தார். மேலும் அந்த பெண்ணை அன்று மாலைக்குள் அந்த நாட்டை விட்டு செல்லும் படி ஆணையிட்டார். துறவி சொன்னது போலவே அந்த நாட்டை விட்டு புறப்பட்டாள் அப்பெண். இருந்தாலும் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன், திரும்பி பார்த்ததால் அந்த பெண்ணும் கல்லாக மாறியதாக இக்கோவிலின் வரலாறு சொல்கிறது.

ராஜஸ்தானின் பர்மர் பகுதியில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் பாலைவனப்பகுதியில் கிராடு கோவில் அமைந்துள்ளது. இங்கு 11 ம் நூற்றாண்டில் 5 கோவில்கள் இருந்துள்ளன. அவைகள் தற்போது பாலைவனமாகி உள்ளன. இந்த கோவில் வழக்கம் போல் சிதலமடைந்து, சிற்பங்கள் நிறைந்த சிறிய கட்டிடங்களாக உள்ளன. இது தற்போது புதிய சுற்றுலா தலமாக மாறி உள்ளது. இந்த கோவிலின் வாயிலில் துருப்பிடித்திருக்கும் பெரிய கேட் எப்போதும் மூடப்பட்டிருக்கும். உள்ளே செல்ல நினைப்பவர்கள் அருகில் உள்ள சிறிய வாசல் வழியாக தான் செல்ல வேண்டும்.

Read more: நள்ளிரவில் கோரம்.. லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 9 விவசாயிகள் பலி..!!

Next Post

முதல்வர், அமைச்சர்கள் இனி ரூ.1.25 லட்சம் வரையிலான உயர் ரக போன்கள் வாங்க அனுமதி!. டெல்லி அரசு அதிரடி!

Tue Jul 15 , 2025
டெல்லி முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள உயர் ரக ஸ்மார்ட்போன்களை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரம்பற்ற லேண்ட்லைன் பில்களையும் அரசு செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், டெல்லி அரசு மொபைல் போன் கொடுப்பனவுகள் குறித்த தனது கொள்கையை திருத்தியுள்ளது, இதன் மூலம் அதன் உயர் அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை கணிசமாக […]
delhi cm minister phone rate 11zon

You May Like