கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் இதுகுறித்து தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ கரூரில் நடந்தது திட்டமிட்ட சதி.. எங்களை முடக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு சதி செய்துள்ளது.. காவல்துறையினர் கொடுத்த நேரத்தில் விஜய் கரூர் சென்றார்.. விஜய் தாமதமாக கரூர் சென்றார் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு.. கரூரில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின் விஜய் பேசத் தொடங்கினார்..
இடையே தண்ணீர் கேட்டவர்களுக்கு தண்ணீர் வழங்கினார்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டார்.. சம்பவம் நடந்த உடன் நான் உள்ளிட்ட பலர் கரூரில் தான் இருந்தோம்.. அப்போது பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதிகேட்ட போது கலவரம் வரும் என்று போலீசார் கூறியதால் தான் மீண்டும் கரூருக்கு செல்லவில்லை..
துக்கம் நடந்த உடனேயே எப்படி ஊடகங்கள் முன்பு பேச முடியும்.. அதன்பிறகு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. நாங்களும் மனிதர்கள் தான்.. எங்களுக்கு மனித நேயம் இருக்கிறது.. அரசு அமைத்த விசாரணை ஆணையம் விசாரணையை நடத்தும் போது அரசு சார்பில் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? இந்த சம்பவத்தின் மூலம் திமுக அரசு தவெகவையும் விஜய்யையும் முடக்க பார்க்கிறது..
விசாரணையே இல்லாமல் தவெக மீது தான் தவறு என்பது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.. சென்னை உயர்நீதிமன்றத்தின் தவறு என்பதை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.. எங்கள் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்தனர்.. தவெகவுக்கு ஆதரவாக இருந்த யூடியூபர்கள், தவெக நிர்வாகிகளை கைது செய்தனர்.. ஊடகங்களை சந்திக்க முடியவில்லை.. நீதித்துறையையும் உடனடியாக அணுக முடியவில்லை.. கரூர் சம்பவத்திற்கு தவெக தான் பொறுப்பு என்ற தகவல் பரப்பப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்றம் எங்கள் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றமே இந்த விசாரணையை கண்காணிக்கும் என்றும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.. தவெக வளர்ந்து வரும் கட்சியாக மாறி உள்ள நிலையில் எங்களை முடக்க பார்த்தனர்.. மாநில அரசு விசாரணை நடந்தால் உண்மை வெளிவராது.. இன்று சரியான தீர்ப்பு வந்துள்ளது..” என்று தெரிவித்தார்.