மழை சீசன்!. துணிகளை காய வைக்க இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!.

drying cloths 1

எந்த கிளைமேட்டாக இருந்தாலும் துணி துவைக்காமல் நம்மால் இருக்க முடியாது. வெயில் காலமென்றால் ஈஸியாக துவைத்த துணி எல்லாம் காய்ந்து விடும். ஆனால் மழைக்காலத்தில் துணி துவைத்து காய வைப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் சூரிய ஒளியும் அவ்வளவாக இருக்காது. இவ்வளவு தடைகளையும் தாண்டி துணி சிறிது காய்ந்தாலும் கூட அடுத்த மழை வந்து துணிகளை நனைத்து விடும். சரி எப்படி தான் மழைக்காலத்தில் துணியை காய வைப்பது என யோசிக்கிறீங்களா.? கீழே கொடுத்துள்ள வழிகளை முயற்சி செய்து பாருங்கள்.


துணியை காயப்போடும் சிறிது நேரம் தண்ணீரை நன்றாக கொடி கயிற்றில் போட்டு வடிய விடுங்கள். அதன் பின்னர் முடிந்த வரை தண்ணீரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நன்றாக பிழிந்து விட்டு காயப்போடுங்கள். துணி காயும் நேரம் கட்டாயம் குறையும்.

வீட்டில் டேபிள் ஃபேன் இருக்கும் பட்சத்தில் துணிகள் மீது படுமாறு வைத்தால் சீக்கிரம் காய்ந்து விடும். வீட்டில் ஹீட்டர் இருந்தால் காய வைப்பது இன்னுமே எளிது. அவசரமாக ஏதேனும் ஒரு ட்ரெஸை நீங்கள் காய வைக்க வேண்டும் என்றிருந்தால் இந்த மெத்தட் உங்களுக்கு உதவலாம். ஹேர் ட்ரையரை கூல் செட்டிங்கில் வைத்து குறைந்தது 6 இன்ச் இடைவெளியில் துணிகள் மீது காட்டி காய வைக்கலாம்.

சொட்ட சொட்ட நீர் வடியாமல் சிறிது ஈரமாக இருக்கும் போது இதை நீங்கள் முயற்சிக்கலாம். மிதமான சூட்டில் ஈரத்துணியை அயன் செய்தால் துணி காய்வது மட்டுமல்லாமல் சுருக்கங்களும் நீங்கும். என்னதான் வீட்டினுள் ஃபேனுக்கு அடியில் காயப்போட்டாலும் மழைக்காலங்களில் காற்றில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். அப்படி இருக்க டீஹ்யுமிடிஃபையரை பயன்படுத்தினால் ஈரப்பதத்தை போக்க முடியும்.

துர்நாற்றம் வராமல் தடுக்க வினிகர் மற்றும் எலுமிச்சை: மழைக்காலத்தில் துணிகள் முழுவதுமாகக் காயாமல் இருக்கும்போது, அதிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசும். இதைத் தவிர்க்க, துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு கப் வினிகர் அல்லது சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து அலசலாம். வினிகரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் துர்நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளைக் கொல்லும்.

Readmore: ஆப்பிள் சாப்பிடுவதால் கொழுப்பின் அளவைக் குறைக்க முடியுமா? அறிவியல் என்ன சொல்கிறது?.

KOKILA

Next Post

அசைவப் பிரியர்களே உஷார்..!! மீன் சாப்பிட்டதும் இந்த 5 உணவுகளைத் தொட்டால் என்ன ஆகும் தெரியுமா..?

Wed Oct 22 , 2025
அசைவப் பிரியர்களில் பலர் மட்டன், சிக்கனை விட மீனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், மீன் சாப்பிட்ட பின், பலரும் இனிப்பு சாப்பிடவோ அல்லது குளிர்ந்த ஐஸ்கிரீம் சாப்பிடவோ விரும்புவதுண்டு. மீன் சாப்பிட்ட பிறகு பால், டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான அறிவுரையாக இருந்தாலும், மீன் உண்டபின் ஐஸ்கிரீம் சாப்பிடுவது சரியா, பாதுகாப்பானதா என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. அசைவ உணவு அல்லது மீன் சாப்பிட்ட பிறகு […]
Fish 2025

You May Like