பஹாவல்பூரில் பயங்கரவாதத் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினரை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல் தாக்குதலை நடத்தியதாக ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.இ.எம்) தளபதி ஒப்புக்கொண்டதிலிருந்து பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் போலித்தனம் வெளிப்பட்டுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தின் தாரில் ‘பி.எம். மித்ரா பூங்கா’வைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் “ இன்று, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் உண்மையை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள், ஜெய்ஷ் பயங்கரவாதிகள் எவ்வாறு பாகிஸ்தானை அம்பலப்படுத்தினார்கள் என்பதை உலகம் முழுவதும் கண்டிருக்கிறது..
இந்தியாவின் தாக்குதல் தங்களின் தளங்களை அழித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பஹல்காமில் தாக்குதல் நடத்தினர்.. நமது வீரர்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மையங்களை அழித்தார்கள். இது புதிய பாரதம், அது எந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது.. நாம் அவர்களின் இடத்திற்கே சென்றே தாக்குதல் நடத்துகிறோம்” என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
ஜெ.இ.எம் தளபதியின் வைரல் வீடியோ
முன்னதாக, ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.இ.எம்) தளபதி ஒருவர், மே 7 அன்று பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள அமைப்பின் தலைமையகத்தில் இந்திய ஏவுகணைத் தாக்குதல்களில் மசூத் அசாரின் குடும்பம் “துண்டு துண்டாக உடைக்கப்பட்டதாக” ஒப்புக்கொண்டார்.
அந்த வீடியோவில் “ இந்த நாட்டின் சித்தாந்த மற்றும் புவியியல் எல்லைகளைப் பாதுகாக்க, நாங்கள் டெல்லி, காபூல் மற்றும் கந்தரில் ஜிஹாத் நடத்தினோம். எல்லாவற்றையும் தியாகம் செய்த பிறகு, மே 7 அன்று, பஹாவல்பூரில் உள்ள மௌலானா மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் (இந்திய தாக்குதல்களில்) துண்டு துண்டாக கிழிக்கப்பட்டனர்.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹால்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.. இதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன.
பஹால்காம் படுகொலைக்கு சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப்படைகள் மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன் ஒரு பகுதியாக, ஜெ.இ.எம் பயங்கரவாதக் குழுவின் கோட்டையான பஹாவல்பூர் உள்ளிட்ட பயங்கரவாத இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின.