ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒரு பள்ளத்தில் விழுந்ததில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்..
ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் அருகே சிஆர்பிஎஃப் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மலையில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.. 16 பேர் காயமடைந்தனர்.. இன்று காலை 10:30 மணியளவில், வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. 187வது படைப்பிரிவைச் சேர்ந்த வாகனத்தில் 23 பேர் இருந்தனர்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், காண்ட்வா-பசந்த்கர் பகுதியில் இந்த விபத்து நடந்ததாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “நிலைமையை நேரில் கண்காணித்து எனக்கு தகவல் அளித்து வரும் டிசி சலோனி ராயிடம் நான் இப்போதுதான் பேசினேன்,” என்று பதிவிட்டுள்ளார்..
உதம்பூர் கூடுதல் எஸ்பி சந்தீப் பட் கூறுகையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா விபத்து குறித்து இரங்கல் தெரிவித்தார்.. சிறந்த உதவியை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் “உதம்பூர் அருகே நடந்த விபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்களை இழந்தது வருத்தமளிக்கிறது. தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சிறப்பான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இந்த விபத்தில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இதனால் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது..
Read More : 3 பேர் பலி.. நீர் மூலம் பரவும் அரிய வகை நோய்.. மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்..!! அறிகுறிகள் இவை தான்..