மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா! தேதி அறிவிப்பு.. விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

jana nayagan

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்..


அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

இந்த படத்தை கேவிஎன் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் போஸ்டர், முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது..

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. மலேசிய தலைநகர் கோலாம்பூரில் உள்ள புகிட் ஜலில் அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது..

இது விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுவதால், விஜய் நடித்த படங்களின் ஐகானின் காட்சிகள், பாடல்கள், விஜய் நடனம் ஆகியவை அடங்கிய ஒரு வீடியோவையும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.. மேலும் விஜய்யின் முக்க்கியமான வசனங்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.. அதே போல் விஜய்யை ஏன் பிடிக்கும் என்று மலேசிய விஜய் ரசிகர்கள் பகிர்ந்து கொள்ளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன..

Read More : Breaking : சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

RUPA

Next Post

4 புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது.. மத்திய அரசு அறிவிப்பு..

Fri Nov 21 , 2025
மத்திய அரசு இன்று ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்திய 4 தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) உடனடி அமலுக்கு வருவதாக அறிவித்தது. இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முடிவாக பார்க்கப்படுகிறது.. 4 தொழிலாளர் குறியீடுகள் என்னென்ன : ஊதியக் குறியீடு, 2019 (Code on Wages, 2019) தொழில்துறை உறவுகள் குறியீடு, 2020 (Industrial Relations Code, 2020) […]
new labour codes

You May Like