ஜெயம்ரவிக்கு 42-வது பிறந்த நாள் …’’தரமான படங்கள் கொடுப்பதுதான் முக்கியம் ’’ – நடிகர் ஜெயம்ரவி

சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு குடும்பத்தினரோடு சிறப்பாக மற்றும் எளிமையாக கொண்டாடினார்.

1980 – ம் ஆண்டு பிறந்த ஜெயம்ரவிக்கு இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைகின்றது. மோகனின் மகனும் , இயக்குனர் எம்.ராஜாவின் சகோதரரான ஜெயம் ரவி … ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று வரை வெற்றியடைந்த பல வெற்றி படங்களை கொடுத்து ஜெயம் என்ற பெயரை தன் பெயரில் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார். எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தாஸ், மழை, இதயத்திருடன், சம்திங் சம்திங், தீபாவாளி, சந்தோஷ் சுப்பிரமணி, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், நிமிர்ந்துநில், தனி ஒருவன், பூலோகம், போகன், வனமகன் போன்று அடுத்தடுத்து பல வெற்றித் திரைப்படங்கள் பெயரை பதித்துள்ளதாக . அடுத்ததாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன் வர உள்ளது.

இன்று பிறந்த நாள் விழாவில் பேசி அவர் ’’சினிமா வாழ்க்கையில் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனக்கு மகிழ்ச்சியான பிறந்த நாளாக உள்ளது.  42 ஆண்டுகளில் வெறும் 25 படம் தான் கொடுத்துள்ளோம். எனக்கு பிறகு சினிமாவுக்கு வந்தவர்கள் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்கள். ஏன் ? என நான் யோசித்துள்ளேன். அப்போது புரிந்தது தரமான படங்களை தர வேண்டும். தவிர குவாண்டிட்டி முக்கியம் அல்ல குவாலிட்டிதான் முக்கியம் என்பதை உணர்ந்தேன். ’’ என்றார். இந்த சூழலில் அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.

Next Post

விக்ரம் 100 போஸ்டர் வெளியீடு …… 100வது நாள் வெற்றிக்கு நன்றி - கமலஹாசன் டுவீட் ….

Sat Sep 10 , 2022
விக்ரம் திரைப்படம் 100வது நாள் வெற்றியை அடுத்து போஸ்டர் வெளியிட்டு நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாள் நிறைவடைவதை ஒட்டி தனது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நடிகர் கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவில் ’’ வணக்கம் , ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் 100வது நாளை எட்டியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் […]

You May Like