மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (Hindustan Copper Limited – HCL) நிறுவனத்தில், பல்வேறு பிரிவுகளில் சூப்பர்வைசர் நிலை ஜூனியர் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
- மைனிங் – 13
- புவியியல் – 8
- சர்வே – 2
- சுற்றுச்சூழல் – 3
- எலெக்ட்ரிக்கல் – 3
- மெக்கானிக்கல் – 8
- சிவில் – 6
- மினரல் பிராசஸ் – 6
- நிதி – 6
- ஹெச்.ஆர் – 1
- அட்மின் – 3
- சட்டம் – 3
- மெட்டீரியல் – 2
வயது வரம்பு: ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது தளர்வு (Reservation Relaxation):
- SC – 5 ஆண்டுகள்
- ST – 3 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- மாற்றுத்திறனாளிகள் – 10 முதல் 15 ஆண்டுகள்
கல்வித்தகுதி:
* மைனிங்கில் பணிக்கு டிப்ளமோ உடன் 5 ஆண்டுகள் அனுபவம் தேவை. மேலும் Foreman சான்றிதழ் அவசியம்.
* புவியியல் பிரிவிற்கு டிராப்ட்மேன் டிப்ளமோ உடன் 5 ஆண்டுகள் அனுபவம் அவசியமாகும். அல்லது புவியியலில் முதுகலை பட்டப்படிப்புடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* சர்வே பிரிவிற்கு அதற்கான டிப்ளமோ மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மைனிங் பொறியியலில் இளங்கலை பட்டத்துடன் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
* சுற்றுச்சூழல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்புடன் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
* எலெக்ட்ரிக்கல் பிரிவிற்கு அதற்கான டிப்ளமோ மற்றும் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலெக்ட்ரிக்கல் பொறியியலில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* சிவில் பிரிவிற்கு டிப்ளமோ உடன் 5 ஆண்டு அனுபவம் அல்லது இளங்கலை பட்டப்படிப்புடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* மினரல் பிராசஸ் பதவியின் அதற்கான பட்டப்படிப்புடன் 2 ஆண்டு அனுபவம் தேவை.
* நிதி பிரிவில் உள்ள பணிக்கு பட்டயக் கணக்காளர்கள் அல்லது செலவு மற்றும் பணி கணக்காளர்கள் நிறுவனம் ஆகியவற்றில் இடைநிலை தேர்வில் தகுதிப் பெற்றிருக்க வேண்டும். அல்லது பிஜி டிப்ளமோ, எம்பிஏ உடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* ஹெச்.ஆர் மற்றும் அட்மின் பதவிக்கு பட்டப்படிப்புடன் 5 ஆண்டு அனுபவம் அல்லது, எம்பிஏ ஹெச்.ஆர், பிஜி டிப்ளமோ உடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* சட்டப்பிரிவிற்கு பட்டப்படிப்புடன் 5 ஆண்டு அனுபவம் அல்லது சட்டப்படிப்புடன் 2 ஆண்டு அனுபவம் தேவை.
* மெட்டிரியல் மற்றும் ஒப்பந்தங்கள் பிரிவிற்கு பட்டப்படிப்பு, பிஜி டிப்ளமோ, எம்பிஏ உடன் 2 ஆண்டு அனுபவம் தேவை.
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு + சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை நகரில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெறும். விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பிக்கும் போது தங்களுக்கு விருப்பமான தேர்வு மையத்தைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு கணினி வழி (Computer Based Test – CBT) மூலம் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதார்கள் https://www.hindustancopper.com/ என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 27-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்குகிறது.
Read more: குளிர்காலத்தில் காலை நடைப்பயிற்சி நல்லதா..? யாருக்கெல்லாம் ஆபத்து..? – விளக்கும் மருத்துவர்..!



