மத்திய அரசின் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் வேலை.. ரூ.1,60,000 வரை சம்பளம்..! எப்படி விண்ணப்பிப்பது..?

Govt Job 2025

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேனேஜர் மற்றும் மனிதவள (HR) அதிகாரி பதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.


காலிப்பணியிடங்கள்:

அதிகாரி / உதவி மேனேஜர் (HR) – 22

வயது வரம்பு: அதிகாரி பதவிக்கு அதிகபடியாக 29 வயது வரை இருக்கலாம். உதவி மேனேஜர் பதவிக்கு 30 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் தளர்வு பின்பற்றப்படும்.

கல்வித்தகுதி: எந்தவொரு துறையிலும் பட்டப்படிப்பு முடித்திருப்பதுடன், 2 ஆண்டு MBA (HR / IR) அல்லது MSW (சமூகப் பணி) / HR / IR உடன் கூடிய சமூகப் பணி முதுகலை பட்டம் (அல்லது) பணியாளர் மேலாண்மை மற்றும் தொழில்துறை உறவுகள் (PM & IR) தொடர்பான முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முதுகலை பட்டதாரிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை: சட்டம் (Law) மற்றும் மனிதவள (HR) துறைகளில் நிபுணர்த்துவ சான்றிதழ்கள் பெற்றவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.

பணி அனுபவம்:

* HR அதிகாரி பதவிக்கு மனிதவளத் துறையில் குறைந்தது 2 ஆண்டு பணியனுபவம்

* உதவி மேனேஜர் பதவிக்கு மனிதவளத் துறையில் குறைந்தது 4 ஆண்டு பணியனுபவம்

சம்பளம்:

அதிகாரி பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

உதவி மேனேஜர் பதவிக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதிக்கு ஏற்ப ஆட்கள் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் தேர்வாகும் நபர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, அதன் பின்னர் இறுதி தேர்வு பட்டியல் வெளியீடப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு https://bemlindia.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 07.01.2026 மாலை 6 மணி வரை.

Read more: குடல் அசைவுகளின் போது இந்த அறிகுறிகள் தெரிகிறதா..? புற்றுநோயாக இருக்கலாம்..! – மருத்துவர் வார்னிங்..

English Summary

Job at Bharat Earth Movers, a central government company.. Salary up to Rs. 1,60,000..! How to apply..?

Next Post

மனைவியுடன் சேர்ந்து அம்மாவை தரகுறைவா பேசிய மகன்.. விரக்தியில் வசந்தா எடுத்த விபரீத முடிவு.! யாருமே எதிர்பார்க்கல..

Sun Dec 28 , 2025
The son who spoke disparagingly of his mother with his wife.. Vasantha's desperate decision.!
death n

You May Like