மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை.. ரூ.1,20,000 சம்பளம்..! விண்ணப்பிக்க ரெடியா..?

job 5

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (Hindustan Copper Limited) நிறுவனத்தில், பல்வேறு பிரிவுகளில் சூப்பர்வைசர் நிலை ஜூனியர் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியிட விவரம்:

  • மைனிங் – 13
  • புவியியல் – 8
  • சர்வே – 2
  • சுற்றுச்சூழல் – 3
  • எலெக்ட்ரிக்கல் – 3
  • மெக்கானிக்கல் – 8
  • சிவில் – 6
  • மினரல் பிராசஸ் – 6
  • நிதி – 6
  • ஹெச்.ஆர் – 1
  • அட்மின் – 3
  • சட்டம் – 3
  • மெட்டீரியல் – 2

வயது வரம்பு: இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் விதிமுறைகளின்படி சில பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது:

SC பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்

ST பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்

OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்

மாற்றுத்திறனாளிகள் – 10 முதல் 15 ஆண்டுகள் தளர்வு

கல்வித்தகுதி:

மைனிங் பிரிவு

  • டிப்ளமோ + 5 ஆண்டு அனுபவம்
  • Foreman சான்றிதழ் அவசியம்

புவியியல் (Geology) பிரிவு

  • டிராப்ட்மேன் டிப்ளமோ + 5 ஆண்டு அனுபவம் அல்லது
  • புவியியலில் முதுகலை பட்டம் + 2 ஆண்டு அனுபவம்

சர்வே பிரிவு

  • சர்வே டிப்ளமோ + 5 ஆண்டு அனுபவம் அல்லது
  • மைனிங் பொறியியல் இளங்கலை பட்டம் + 2 ஆண்டு அனுபவம்

சுற்றுச்சூழல் (Environment) பிரிவு

  • இளங்கலை பட்டம் + 2 ஆண்டு அனுபவம்

எலெக்ட்ரிக்கல் பிரிவு

  • எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ + 5 ஆண்டு அனுபவம் அல்லது
  • எலெக்ட்ரிக்கல் பொறியியல் பட்டம் + 2 ஆண்டு அனுபவம்

சிவில் பிரிவு

  • சிவில் டிப்ளமோ + 5 ஆண்டு அனுபவம் அல்லது
  • சிவில் இளங்கலை பட்டம் + 2 ஆண்டு அனுபவம்

மினரல் பிராசஸ் (Mineral Process)

  • அதற்கான தொடர்புடைய பட்டப்படிப்பு + 2 ஆண்டு அனுபவம்

நிதி (Finance) பிரிவு

  • பட்டயக் கணக்காளர் / செலவுக் கணக்காளர் – இடைநிலை தேர்ச்சி அல்லது
  • பிஜி டிப்ளமோ / எம்பிஏ + 2 ஆண்டு அனுபவம்

மனிதவள மேலாண்மை (HR & Admin)

  • பட்டப்படிப்பு + 5 ஆண்டு அனுபவம் அல்லது
  • எம்பிஏ HR / PG டிப்ளமோ + 2 ஆண்டு அனுபவம்

சட்ட பிரிவு (Legal)

  • பட்டப்படிப்பு + 5 ஆண்டு அனுபவம் அல்லது
  • சட்டப்படிப்பு + 2 ஆண்டு அனுபவம்

மெட்டீரியல் & ஒப்பந்தங்கள் (Materials & Contracts)

  • பட்டப்படிப்பு / பிஜி டிப்ளமோ / எம்பிஏ + 2 ஆண்டு அனுபவம்

சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

* இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு + சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

* எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை நகரில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெறும்.

* விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பிக்கும் போது தங்களுக்கு விருப்பமான தேர்வு மையத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

* தேர்வு கணினி வழி (Computer Based Test – CBT) மூலம் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதார்கள் https://www.hindustancopper.com/ என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.  நவம்பர் 27-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்குகிறது.

Read more: ஒரு காலத்தில் ஹிட் ஹீரோயின்.. பணத்துக்காக நண்பர்களே படுக்கைக்கு அழைத்த சோகம்..! நடிகை கிரணுக்கு இப்படி ஒரு நிலமையா..?

English Summary

Job at Hindustan Copper Company of the Central Government.. Salary of Rs.1,20,000..! Ready to apply..?

Next Post

பீகாரின் நீண்டகால முதல்வர் நிதிஷ் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு? விவரம் இதோ..!

Fri Nov 14 , 2025
நிதிஷ் குமார், பீகார் மாநிலத்தின் நீண்டகால முதல்வர், ஜனதா தால் (யூனிடெட்) கட்சியை வழிநடத்தும் அவர் பல முறை முதல்வர் பதவியில் இருந்துள்ளார். நிர்வாகத் திறனில் கவனம் செலுத்தும் நிதிஷ் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 1 மார்ச் 1951 அன்று பீகாரின் கிராமப்புறத்தில் பிறந்த நிதிஷ் குமார், பீகார் அரசியலில் மிகவும் பாதிப்புள்ள தலைவராக உருவெடுத்தார். பல முறை முதல்வராக பணியாற்றிய இவர், வளர்ச்சியைக் கவனிக்கும் நிர்வாக […]
nitish kumar 1

You May Like