மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் (BEML), 119 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்:
ஜூனியர் நிர்வாகி – மெக்கானிக்கல் – 88
ஜூனியர் நிர்வாகி – எலெக்ட்ரிக்கல் – 18
ஜூனியர் நிர்வாகி – உலோகவியல் – 2
தகவல் தொழில்நுட்பம் – 1
நிதி – 8
ராஜ்பாஷா – 2
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபடியான வயது வரம்பு 29 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
மெக்கானிக்கல் / எலெக்ட்ரிக்கல் / உலோகவியல் பிரிவு: காலிப்பணியிடங்களுக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அல்லது உலோகவியல் முழு நேர பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேசிய அளவில் எங்கும் பணி நியமனம் வழங்கப்படும்.
ஐடி / கணினி பிரிவு: கணினி அறிவியல், ஐடி அல்லது கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். பணி கேரளா, பாலக்காட்டில் வழங்கப்படும்.
நிதி பிரிவு: CA-Inter / CMA-Inter அல்லது இரண்டு ஆண்டு எம்பிஏ படித்திருக்க வேண்டும்.
பணி எங்கும் வேண்டுமானாலும் வழங்கப்படும்.
ராஜ்பாஷா பிரிவு: ஆங்கிலம் + இந்தி மொழியில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். இந்தி தட்டச்சு திறன் அவசியம். பணி ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் வழங்கப்படும்.
பொதுவான தகுதிகள்: பட்டப்படிப்புகளில் 60% மதிப்பெண்கள் பெற்றிருப்பது கட்டாயம். விண்ணப்பதாரர்களுக்கு அனுபவம் அவசியமில்லை; 1–2 ஆண்டு அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்கள் 4 வருடத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். முதல் வருடம் ரூ.35,000, இரண்டாம் வருடம் ரூ.37,500, மூன்றாம் வருடம் ரூ.40,000 மற்றும் 4ஆம் வருடம் ரூ.43,000 வழங்கப்படும். வருடத்திற்கு ஒரு முறை ரூ.11,000 இதர செலவுகளுக்கு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- மத்திய அரசு நிறுவன பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும்.
- ஜூனியர் நிர்வாகி பதவி: 2 மணி நேர கணினி வழி எழுத்துத் தேர்வு.
- ராஜ்பாஷா பதவி: 2 மணி நேர எழுத்துத் தேர்வுடன், 10 நிமிடத் தட்டச்சு தேர்வு கூடுதலாக.
தேர்வில் தேர்ச்சி:
- 60% மதிப்பெண்கள் தேர்ச்சி பெற தேவையானவை.
- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள்: 5% தளர்வு வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை:
- தன்னிச்சையாக செலவில் தேர்வுக்கு வர வேண்டும்.
- தேர்வு தொடர்பான முழு விவரங்கள் அட்மிட் கார்டில் இடம்பெறும்.
- தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மட்டுமே அட்மிட் கார்டு வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.bemlindia.in/careers/ என்ற இணைப்பின் மூலம் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் 26-ம் தேதி வரை பெறப்படுகிறது.



