மத்திய அரசின் மினி ரத்னா நிறுவனமான திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு இந்தியா லிமிடெட் (Projects and Development India Limited – PDIL) நிறுவனம், பல்வேறு பிரிவுகளில் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 87 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) வழங்கப்படுகின்றன.
டிப்ளமோ பணியிடங்கள்: டிப்ளமோ பெற்றவர்களுக்கு மொத்தம் 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிவில் பிரிவில் 2, கணினி பிரிவில் 2, இன்ஸ்ரூமெண்டேஷன் பிரிவில் 1, மெக்கானிக்கல் பிரிவில் 8, மேலும் டிசைன் பிரிவில் 2 பணியிடங்கள் உள்ளன.
டிகிரி பொறியாளர் பணியிடங்கள்: டிகிரி முடித்தவர்களுக்கு மொத்தம் 72 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிவில் பிரிவில் 19, எலெக்ட்ரிக்கல் 7, தீ மற்றும் பாதுகாப்பு பிரிவில் 5, ஆய்வு (சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல்) பிரிவில் 4, இன்ஸ்ரூமெண்டேஷன் 5, மேலாண்மை சேவை 1, பொருள் மேலாண்மை 3, மெக்கானிக்கல் 18, செயல்முறை பிரிவு (Process) 7 மற்றும் திட்ட மேலாண்மை பிரிவில் 3 பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
டிப்ளமோ தகுதிப் பெற்றவர்கள்:
- அதிகபட்சம் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- கிரேடு–2 பதவிக்கு அதிகபட்சம் 35 வயது,
- கிரேடு–3 பதவிக்கு 32 வயது வரையிலும் தகுதி.
டிகிரி தகுதிப் பெற்றவர்கள்:
- அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- அதில் கிரேடு–3 பிரிவில் 37 வயது வரையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
* அந்தந்த பாடப்பிரிவு அல்லது அதனை தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* டிப்ளமோ பொறியாளர் பதவிக்கு 2 முதல் 5 வருடங்கள் வரையும்,
* டிகிரி பொறியாளர் பதவிக்கு 2 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
டிப்ளமோ தகுதி:
- 2 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள்: ₹26,600/மாதம்
- 5 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள்: ₹32,100/மாதம்
டிகிரி தகுதி:
- 2 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள்: ₹42,500/மாதம்
- 5 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள்: ₹51,800/மாதம்
- 8 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள்: ₹59,700/மாதம்
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் https://pdilcareer.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தில் அளித்த தகவலின் அடிபப்டையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நவம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்.
Read more: கர்ப்பிணிப் பெண்கள் எடை அதிகரிப்பதை தடுக்கும் கத்தரிக்காய்.. இத்தனை நன்மைகளா..?



