மத்திய அரசின் பொதுத்துறை காப்பீடு நிறுவனமான தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 550 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிட விவரங்கள்:
- ரிஸ்க் இன்ஜினியர் – 50
- ஆட்டோமொபைல் இன்ஜினியர் – 75
- சட்ட நிபுணர்கள் – 50
- அக்கோன்ஸ் நிபுணர்கள் – 25
- AO சுகாதாரம் – 50
- ஐடி நிபுணர்கள் – 25
- வணிக ஆய்வாளர் (Business Analysts) -75
- நிறுவன செயலாளர் – 2
- காப்பீட்டு நிபுணர் (Actuarial Specialists) – 5
- பொது (Generalists) – 193
- மொத்தம் – 550
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு 01.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.08.1995 தேதிக்கு முன்னரும், 01.08.2004 தேத்க்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் தளர்வு உள்ளது.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கல்வித் தகுதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
பொது காலிப்பணியிடங்கள்:
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம்.
- குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 55% மதிப்பெண்கள்.
நிபுணர் பதவிகள்:
Risk Engineer: ஏதேனும் ஒரு பொறியியல் பாடத்தில் B.E./B.Tech அல்லது M.E./M.Tech.
Automobile Engineer: Automobile Engineering-ல் B.E./B.Tech/M.E./M.Tech அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் டிகிரியுடன் டிப்ளமோ.
சட்ட நிபுணர் (Legal): சட்டத்தில் இளங்கலை (LL.B) அல்லது முதுகலை (LL.M).
Accounts நிபுணர்: CA, Management Accountant அல்லது பட்டப்படிப்பு/முதுகலை + MBA (Finance/Accounts).
AO (Health): M.B.B.S / M.D. / M.S. அல்லது B.D.S / M.D.S அல்லது BAMS / BHMS அல்லது சமமான மருத்துவப் படிப்பு.
IT நிபுணர்: தகவல் தொழில்நுட்பம் அல்லது கணினி அறிவியலில் B.E./B.Tech/M.E./M.Tech அல்லது MCA.
வணிக ஆய்வாளர் (Business Analyst): புள்ளியியல் / கணிதம் / கணக்கியல் அறிவியல் / தரவு அறிவியல் / வணிக ஆய்வாளர் துறையில் இளங்கலை அல்லது முதுகலை.
நிறுவன செயலாளர் (Company Secretary): ICSI வழங்கிய ACS/FCS சான்று + பட்டப்படிப்பு.
காப்பீட்டு நிபுணர் (Insurance Specialist): பட்டப்படிப்பு + IAI அல்லது IFoA வழங்கிய தகுதி.
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.50,925 ஆகும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு 3 கட்ட தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என நடத்தப்படும். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பணி நியமனம் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: மத்திய அரசின் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.newindia.co.in/recruitment/list என்ற இணைப்பின் மூலம் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி மாற்றுத்திறனாளிகள் ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: இதற்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 7-ம் தேதியே தொடங்கிய நிலை ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம்.
Read more: எவ்வளவு தூரம் நடந்தாலும் எடை குறையலையா..? பலரும் செய்ற தவறு இதுதான்..!! – விளக்கும் நிபுணர்கள்..