மத்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited – BEL) நிறுவனத்தில், டிரைய்னி பொறியாளர் (Trainee Engineer – I) பணியிடங்களுக்கு தற்போது ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய அளவில் மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்கள் முழுமையாக தற்காலிக அடிப்படையில், இந்தியாவின் பல்வேறு திட்டங்களில் பணியாற்றும் வகையில் நிரப்பப்படுகின்றன.
பணியின் விவரங்கள்:
டிரைய்னி பொறியாளர் – I (Trainee Engineer – I) – 47
ஒதுக்கீடு:
- பொதுப்பிரிவு – 20
- ஒபிசி – 13
- பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EWS) – 4
- எஸ்சி – 7
- எஸ்டி – 3
வயது வரம்பு: பெல் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்களுக்கு அதிகபடியான வயது வரம்பு 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி:
பட்டப்படிப்பு:
B.E / B.Tech / B.Sc முடித்தவர்கள் கீழ்காணும் பிரிவுகளில்:
- எலெக்ட்ரிக்கல் (Electrical)
- எலெக்ட்ரிக்கல் & கம்யூனிகேஷன் (Electrical & Communication)
- எலெக்ட்ரிக்கல் & டெலிகம்யூனிகேஷன் (Electrical & Telecommunication)
- டெலிகம்யூனிகேஷன் (Telecommunication)
- கம்யூனிகேஷன் (Communication)
- எலெக்ட்ரானிக்ஸ் (Electronics)
- கணினி அறிவியல் (Computer Science)
- டேட்டா சயின்ஸ் (Data Science)
- தகவல் அறிவியல் (Information Science)
- தகவல் தொழில்நுட்பம் (Information Technology)
முதுகலை / மேலதிக கல்வி:
- M.E / M.Tech
- MCA (Master of Computer Applications)
சம்பளம்:
* டிரைய்னி பொறியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
* ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு வருடத்திற்கு ரூ.5,000 சம்பளத்தில் அதிகரிக்கப்படும்.
* வருடத்திற்கு ஒரு முறை மருத்துவ காப்பீடு, இதர செலவுகளுக்கு என மொத்தம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
* விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
* விண்ணப்பதாரர்கள் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
* எழுத்துத் தேர்வு தொடர்பான விவரம் மற்றும் அழைப்பிதழ் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
* இறுதி தேர்வு பட்டியல் BEL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: மத்திய அரசு நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க https://bel-india.in/job-notifications/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.11.2025
Read more: 8வது சம்பள கமிஷன் பற்றிய குட்நியூஸ்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்!



