அரசு சுகாதார அலுவலகத்தில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

திருவண்ணாமலை இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அரசு சுகாதார அலுவலகத்தில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் முழு விவரங்கள்:

பணியின் பெயர்சம்பளம்
கணக்கு உதவியாளர்ரூ.16,000
பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர் ரூ.13,000
நகர்ப்புற சுகாதார மேலாளர்/ சுகாதார செவிலியர்ரூ.25,000

கல்வித்தகுதி:

கணக்கு உதவியாளர்Tally படிப்புடன் B.com முடித்திருக்க வேண்டும்
பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர்பிசியோதெரபி படிப்பில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
நகர்ப்புற சுகாதார மேலாளர்/ சுகாதார செவிலியர்செவிலியர் படிப்பில் பிஎஸ்சி/எம்எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்

நிபந்தனைகள்:

  • இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.

மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 02.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் 05.12.2022 அன்று நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உங்கள் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Fri Nov 25 , 2022
சேலம் மாவட்டத்தில் நாளை 40,000 காலிப்பணியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கையும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை சீராக்கும் வகையில் மாவட்ட வாரியாக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்ட நிர்வாகமும், தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 26ஆம் தேதி  நடைபெறவுள்ளது. இந்த […]

You May Like