வருமான வரித்துறையில் வேலை.. மாதம் ரூ.60,000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது..? – முழு விவரம்..

job 7

வருமான வரித்துறையின் மும்பை பிரிவின் கீழ் செயல்படும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT), இளம் வல்லுநர்கள் திட்டம் – 2023ன் கீழ் மொத்தம் 11 காலிப்பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த பணியிடங்களில் தேர்வாகும் நபர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உதவியாக பணியாற்றுவதுடன், வருமான வரி தொடர்பான ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.


வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 2025 டிசம்பர் 15-ம் தேதியின்படி, 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் சட்டப்படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • அல்லது பட்டய கணக்காளர் (CA) பதவியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதார்கள் 3 ஆண்டு சட்டப்படிப்பு (LLB), 5 வருட ஒங்கிணைந்த LLB அல்லது முதுகலை சட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சிஏ தகுதிப்பெற்றவர்களில் வரி விதிப்பு தொடர்பாக article-ship முடித்தவர்கள், சட்டப்படிப்பு மாணவர்களின் வரி விதிப்பு தொடர்பாக ஆய்வு அல்லது திட்டங்களை மேற்கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • நல்ல கம்யூனிகேஷன் திறன் அவசியமாகும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் இப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவாரக்ள். விண்ணப்பதார்களின் இருந்து தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு, அதன் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது? வருவான வரித்துறை இளம் வல்லுநர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் https://www.incometaxmumbai.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முழுமையான விண்ணப்பத்தை நிரப்பு தேவையான ஆவணங்களுடன், தபால் வழியாகவும் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Office of Addl. Commissioner of Income Tax (HQ) Coordination Room No. 335, Aayakar Bhavan, Maharshi Karve Road, Mumbai – 400 020, Maharashtra

விண்ணப்பிக்க கடைசி நாள் 05.01.2026 மாலை 6 மணி வரை.

Read more: குளிர்காலத்தில் வயிறு ஆரோக்கியமாக இருக்கணுமா? அப்ப, இவற்றை மட்டும் சாப்பிடுங்கள்!

English Summary

Job in Income Tax Department.. Salary Rs.60,000 per month.. How to apply..? – Full details..

Next Post

60,000 மாணவர்கள்..! உலகின் மிகப்பெரிய பள்ளி இந்தியாவில் தான் உள்ளது! வியக்க வைக்கும் தகவல்..!

Tue Dec 23 , 2025
Do you know where the world's largest school campus is located?
big school

You May Like