இந்தியாவின் போக்குவரத்து துறையில் முன்னணி ஆலோசனை நிறுவனமாக விளங்கும் ரெயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீசஸ் (RITES) நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டாலர்ஜி மற்றும் கெமிக்கல் துறைகளில் தகுதி பெற்ற டிப்ளமோ அல்லது பி.எஸ்சி கெமிஸ்ட்ரி பட்டதாரிகளுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மொத்தம் 600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பணியிடங்கள் விவரம்:
சீனியர் டெக்னிக்கல் உதவியாளர்: மொத்தம் 600 காலிப்பணியிடங்கள்
- சிவில் – 465
- மின்சாரம் – 27
- S&T – 08
- இயந்திரவியல் – 65
- உலோகம் – 13
- வேதியியல் – 11
வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு, 12-11-2005 அன்றைய தேதிப்படி, 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வுகளும் வழங்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை 13 முதல் 2 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படுகிறது. இதர தளர்வுகள் குறித்த முழு விவரங்களையும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
கல்வித்தகுதி:
* சிவில் பணியிடங்களுக்கு டிப்ளமோவில் சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
* அதேபோல, எலக்ட்ரிக்கல் பணிக்கு எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.
* பணியிடங்களுக்கு தகுந்தவாறு கல்வித் தகுதி மாறுபடும். துறைசார்ந்த பிரிவில் டிப்ளமோ முடித்து இருப்பது அவசியம்.
* சீனியர் டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் (வேதியியல்) பணிக்கு பிஎஸ்சி முடித்து இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் ஆவணச் சரிபார்ப்பு (Document Verification) மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் முறை மற்றும் நடைமுறைகள் குறித்த கூடுதல் விவரங்கள், ஆர்.ஐ.டி.இ.எஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
கடைசி தேதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 12-11-2024 ஆகும்.
Read more: சந்தையில் விற்கப்படும் போலி சிவப்பு மிளகாய் தூள்.. கலப்படத்தை எப்படி கண்டறிவது..?



