தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையில் காலியாக உள்ள பல பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் நிபுணர்கள் (ஸ்பெஷலிஸ்ட்), உதவியாளர், தரவு உள்ளீடு ஆபரேட்டர் போன்ற முக்கிய பதவிகள் அடங்கும்.
ஸ்பெஷலிஸ்ட் பணி விவரம்:
Communication, Public Awareness and Capacity Building:
- தகுதி: Communication, Journalism பிரிவில் முதுநிலைப் பட்டம்
- அனுபவம்: குறைந்தது 5 வருடம் பணி அனுபவம்
Data Monitoring & Documentation
- தகுதி: Computer Science, Statistics, Data Science, Mathematics பிரிவில் முதுநிலைப் பட்டம்
- அனுபவம்: குறைந்தது 5 வருடம் பணி அனுபவம்
Road Safety Aspects
- தகுதி: Civil Engineering பிரிவில் இளநிலைப் பட்டம்
- அனுபவம்: குறைந்தது 5 வருடம் பணி அனுபவம்
சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,50,000 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Data Entry Operator பணி:
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பது அவசியம். மேலும், Computer Applications அல்லது Information Technology பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியும், 3 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருப்பதும் அவசியம்.
உதவியாளர் பணி விவரங்கள்:
சம்பளம்: மாதம் ரூ.50,000
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
அனுபவம்: குறைந்தது 3 வருடம் பணி அனுபவம்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்விற்கு வரும்போது அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். நேர்முகத்தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
- www.tn.gov.in/jobopportunity என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பத்துடன் பயோடேட்டா, அனைத்து சான்றிதழ்களின் நகல்கள், மற்றும் சுய சான்றொப்பம் சேர்க்க வேண்டும்.
- முழுமையாக தயார் செய்த விண்ணப்பத்தை tnrsmu2025@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



