தமிழக அரசில் வேலை.. ஆரம்ப சம்பளமே ரூ.56,000.. செம அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க..!!

job2

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் (Tamil Nadu Animal Welfare Board – TNAWB) மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கால்நடை மருத்துவர்களை பணியமர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் படுகின்றனர்.


காலிப்பணியிடங்கள்:

  • விலக்கு நல அலுவலர் – 38
  • கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் – 38

வயது வரம்பு:

* விலக்கு நல அலுவலர் பதவிக்கு 35 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

* கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு 40 வயதிற்கு குறைவானவராக இருக்க வேண்டும்.

1. மாவட்ட விலங்கு நல அலுவலர் பதவிக்கான தகுதிகள்:

கல்வித்தகுதி: கால்நடை அறிவியலில் இளங்கலை பட்டம் (B.V.Sc. & AH) அல்லது முதுகலை பட்டம் (M.V.Sc.) பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: குறைந்தது 10 ஆண்டுகள் வரை பணியனுபவம் இருக்க வேண்டும். விலங்குகளின் பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் விலங்கு நல பராமரிப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

மற்ற தகுதிகள்:

  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவராக இருக்க வேண்டும்.
  • அரசு நலத்திட்டங்கள், விலங்கு நல சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி பயன்பாடு மற்றும் அறிக்கை தயாரித்தல் குறித்தும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் நன்றாகத் தெரிய வேண்டும்.

2. கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கான தகுதிகள்:

கல்வித்தகுதி: B.V.Sc. & AH பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு கால்நடை கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அனுபவம்: விலங்குகளின் பிறப்பு கட்டுப்பாடு சிகிச்சையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம். அறுவை சிகிச்சை, மகப்பேறியல் (Gynecology) மற்றும் மகளிர் மருத்துவம் தொடர்பான துறைகளில் M.V.Sc. பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை பெறுவர்.

மொழித் திறன்: தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாகப் படித்து, எழுதிப் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.56,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://tnawb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு நவம்பர் 14-ம் தேதி முதல் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், எண்.13/1, 3வது கடல் நோக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை – 600 041.

Read more: பூசாரியை கன்னத்தி அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்.. கடும் வாக்குவாதம்.. தர்ணா.. தேவர் நினைவிடத்தில் என்ன நடந்தது? வீடியோ..!

English Summary

Job in Tamil Nadu Government.. Starting salary is Rs.56,000.. Good announcement.. Apply immediately..!!

Next Post

Flash : முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு விஜய் மரியாதை.. கரூர் சம்பவத்திற்கு பின் வெளியான முதல் போட்டோ..!

Thu Oct 30 , 2025
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், ஜி.கே, மணி, சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி […]
vijay devar

You May Like