மத்திய அரசின் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்( SEBI) முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொது, சட்டம், தகவல் தொழில்நுட்பம், ஆய்வு, அதிகார மொழி, பொறியியல் போன்ற பிரிவுகளில் 110 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலிப்பணியிடங்களுக்கு தேவையின் படி, இந்தியாவில் SEBI கிளை இருக்கும் எந்த நகரத்திலும் பணி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
பணியிட விவரம்:
- பொது 56
- சட்டம் 20
- தகவல் தொழில்நுட்பம் 22
- ஆய்வு 4
- மொழி 3
- பொறியியல் (எலெக்ட்ரிக்கல்) 2
- பொறியியல் (சிவில்) 3
- மொத்தம் 110
வயது வரம்பு: செபி நிறுவனத்தின் உதவி மேலாளர் (Assistant Manager) பதவிக்கு விண்ணப்பிக்க 30 வயதைக் கடந்திருக்கக்கூடாது. அதாவது விண்ணப்பதார்கள் 1995 அக்டோபர் 1-ம் தேதிக்கு பின்னர் பிறந்தவராக இருக்கக்கூடாது. மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி:
பொதுப்பிரிவு: முதுகலை பட்டப்படிப்பு, முதுகலை டிப்ளமோ, சட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல், சிஏ, நிறுவன செயலாளர், செலவு கணக்காளர் போன்ற தகுதிகள் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்பிரிவு: சட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 வருட அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை பெறுவார்கள்.
தகவல் தொழில்நுட்பம்: இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆய்வு பிரிவு: பொருளாதாரம், வணிகம், தொழில் நிர்வாகம், நிதி, புள்ளியியல், டேட்டா சயின்ஸ், ஏஐ மற்றும் மெஷின் லேனிங் பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொழி பிரிவு: இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகம் பாடப்பிரிவுகளில் இந்தி தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் பிரிவு: எலெக்ட்ரிக்கல் மற்றும் சிவில் பொறியியலில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை பெறுவார்கள்.
சம்பளம்: உதவி மேலாளர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.62,500 முதல் தொடங்கி ரூ.1,26,100 என்ற அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சலுமை, கொடுப்பனை, அகவிலைப்படி, பிஎஃப், மருத்துவ காப்பீடு ஆகிய வசதிகள் உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
- SEBI நிறுவனத்தில் இப்பணியிடங்களுக்கு மூன்று கட்ட தேர்வு முறை உள்ளது.
- முதலாவது கட்டம் ஆன்லைனில் கணினி வழி நடைபெறும் தேர்வாகும். இதில் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இரண்டாவது கட்ட ஆன்லைன் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
- இரண்டு தேர்வுகளும் இரண்டு தாள்களில் நடைபெறும்.
- இரண்டாவது கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
- இறுதியாக, தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நிர்வாகி பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.sebi.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ செபி இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.