தமிழ்நாடு அரசின் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை.. ரூ.40,000 சம்பளம்..!! 8வது படித்திருந்தால் போதும்..

job2

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார திட்டம் (NHM) மூலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்ற, மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) தற்காலிக அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


காலிப்பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம்:

இடைநிலை சுகாதார பணியாளர் – 7 (ரூ.18,000)

சுகாதார பணியாளர் – 15 (ரூ.14,000)

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் – 2 (ரூ.13,500)

தூய்மை பணியாளர் – 1 (ரூ.8,500)

பல் மருத்துவர் – 1 (ரூ.34,000)

துணை செவிலியர் – 2 (ரூ.14,000)

மருத்துவமனை பணியாளர் – 9 (ரூ.8,500)

ரேடியோகிராப்பர் – 1 (ரூ.13,300)

அக்குபேஷனல் தெரபிஸ்ட் – 1 (ரூ.13,300)

செவிப்புலன் நிபுணர் & பேச்சு சிகிச்சையாளர் – 1 (ரூ.23,000)

பல் டெக்னீஷியன் – 1 (ரூ.12,600)

பிசியோதெரபிஸ்ட் – 2 (ரூ.13,000)

சீனியர் சிகிச்சை மேற்பார்வையாளர் – 1 (ரூ.19,800)

ஆய்வக டெக்னீஷியன் – 1 (ரூ.13,000)

காசநோய் சுகாதார பார்வையாளர் – 1 (ரூ.13,300)

ஆயுஷ் மருத்துவ அதிகாரி – 1 (ரூ.34,000)

மாவட்ட ப்ரோகிராம் மேனேஜர் – 1 (ரூ.40,000)

ஆலோசகர் – யோகா & இயற்கை மருத்துவம் – 3 (ரூ.40,000)

பல்நோக்கு பணியாளர் – 3 (ரூ.10,000)

வயது வரம்பு:

  • பொதுவாக, இப்பணியிடங்களுக்குத் விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதை கடந்திருக்கக் கூடாது.
  • அக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு, அதிகபடியாக 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
  • ஆயுஷ் மருத்துவ அதிகாரி, மாவட்ட ப்ரோகிராம் மேனேஜர், ஆலோசகர் (யோகா & இயற்கை மருத்துவம்), பல்நோக்கு பணியாளர் ஆகிய பதவிகளுக்கு,
    அதிகபட்ச வயது வரம்பு 59 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

  • விண்ணப்பதாரர்கள், அந்தந்த பதவிக்கேற்ப அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
  • தூய்மை பணியாளர், மருத்துவமனை பணியாளர், பல்நோக்கு பணியாளர் ஆகிய அடிப்படை பணியிடங்களுக்கு, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • தொழில்நுட்ப மற்றும் மருத்துவப் பணியிடங்களுக்கு, தொடர்புடைய டிப்ளமோ / பட்டம் / தொழில்முறை சான்றிதழ்கள் அவசியம்.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு நேரியாக சென்றோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி
நிர்வாக செயலாளர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
விவேகானந்தர்சாலை, கேணிக்கரை, ராமநாதபுரம் – 623501.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.12.2025 மாலை 5 மணி வரை

Read more: இந்தியாவுக்கே பெருமை..!யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்ப்பு..!

English Summary

Job in the District Health Department of the Tamil Nadu Government.. Salary of Rs.40,000..!

Next Post

”2026 தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும்..” பொதுக்குழுவில் இபிஎஸ் உறுதி..!

Wed Dec 10 , 2025
சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தீய சக்தி திமுகவை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.. அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அதிமுகவின் தாரக மந்திரம்.. நாட்டு மக்களை தான் ஜெயலலிதா தனது வாரிசாக பார்த்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் […]
ADMK Chief secretary Edappadi Palanisamy 2 1

You May Like