மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை.. ரூ.40 ஆயிரம் சம்பளம்.. செம சான்ஸ்.. உடனே விண்ணப்பிங்க..!!

job2

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்காக மாவட்ட சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


பணியிட விவரம்:

மருத்துவர் (ஹோமியோபதி) – 3
ஆயுர்வேத மருத்துவர் – 1
யுனானி மருத்துவர் – 1
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவர் – 5
சிகிச்சை உதவியாளர் – 4
மருந்தாளுநர், ஹோமியோபதி – 3
தரவு உதவியாளர் – 1
பல்நோக்கு ஊழியர் – 1
உதவியாளர் – 3
ULB-UHN – 48
கணக்கு உதவியாளர் – 1
டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் – 1

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். ULB-UHN, கணக்கு உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிகளுக்கு 35 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

மருத்துவர் (Doctor)

கல்வித் தகுதி: BHMS / BAMS / BUMS / BNYS போன்ற இந்திய மருத்துவப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சிகிச்சை உதவியாளர் (Therapist Assistant)

கல்வித் தகுதி: நர்சிங் தெரபிஸ்ட் டிப்ளமோ (Nursing Therapist Diploma).

மருந்தாளர் (Pharmacist)

கல்வித் தகுதி: ஹோமியோபதி பார்மசி டிப்ளமோ (Diploma in Pharmacy – Homoeopathy).

தரவு உதவியாளர் (Data Assistant)

கல்வித் தகுதி: கணினி அறிவியல் சார்ந்த துறையில் பட்டப்படிப்பு.

அனுபவம்: குறைந்தது 1 வருட அனுபவம் அவசியம்.

திறன்: தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு அறிவு தேவை.

பல்நோக்கு ஊழியர் / உதவியாளர் (Multipurpose Worker / Assistant)

கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி.

திறன்: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

ULB-UHN பணியிடம்

கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி.

சான்றிதழ்: 2 வருட ANM சான்றிதழ் (Auxiliary Nurse Midwifery).

கணக்கு உதவியாளர் (Accounts Assistant)

கல்வித் தகுதி: B.Com / M.Com முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்: குறைந்தது 1 வருட பணி அனுபவம் அவசியம்.

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operator)

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

திறன்: கணினி அறிவு அவசியம்.

சம்பளம்:

  • மருத்துவர் பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம்.
  • சிகிச்சை உதவியாளர், மருந்தாளுநர், தரவு உதவியாளர் பதவிகளுக்கு ரூ.15 ஆயிரம்.
  • பல்நோக்கு ஊழியர் பதவிக்கு ரூ.8,500.
  • உதவியாளர் பதவிக்கு ரூ.10 ஆயிரம்.
  • ULB-UHN பதவிக்கு ரூ.14 ஆயிரம்.
  • கணக்கு உதவியாளர் பதவிக்கு ரூ.16 ஆயிரம்.
  • டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ரூ.13,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களின் இருந்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணியில் சேருபவர்கள் 11 மாதத்திற்கான ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும்.

விண்ணப்பிகும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை நிரப்பி தபால் மூலம் அனுப்பியோ அல்லது நேரடியாக சென்றோ விண்ணப்பிக்கலாம். 22.10.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேர வேண்டும்.

முகவரி
உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர் – 18.

Read more: சாகும் வரை உண்ணாவிரதம்..!! தருமபுரம் ஆதீனம் பரபரப்பு அறிவிப்பு..!! என்ன காரணம்..?

English Summary

Job in the District Health Department.. Salary of Rs. 40 thousand.. Great opportunity.. Apply immediately..!!

Next Post

பயங்கர விபத்து! டேங்கர் மீது மோதியதால் தீப்பிடித்து எரிந்த LPG சிலிண்டர் லாரி; ஒருவர் பலி; Video!

Wed Oct 8 , 2025
A major fire broke out on the Jaipur-Ajmer highway last night after a lorry loaded with LPG cylinders collided with a tanker.
rajasthan 1759885095 1

You May Like