தமிழ்நாடு ஊராட்சி துறையில் வேலை.. 8வது படித்திருந்தால் போதும்.. கை நிறைய சம்பளம்..! உடனே விண்ணப்பிங்க..

job 7

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், மாவட்ட வாரியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிட விவரம்: ஊராட்சி ஒன்றிய அளவில் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பம் பெறப்படுகிறது.

வயது வரம்பு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் நடைபெறும் ஊராட்சி ஒன்றிய வேலைவாய்ப்புக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01.07.2025 தேதியின்படி வயது கணக்கிடப்படும்.

அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்

  • குறைந்தபட்சம்: 18 வயது
  • பொதுப் பிரிவு: 32 வயது
  • பிசி / எம்பிசி: 34 வயது
  • எஸ்சி / எஸ்டி: 37 வயது

ஈப்பு ஓட்டுநர்

  • குறைந்தபட்சம்: 18 வயது
  • பொதுப் பிரிவு: 32 வயது
  • பிசி / எம்பிசி: 34 வயது
  • எஸ்சி / எஸ்டி: 42 வயது

கல்வித்தகுதி:

* அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

* பதிவறை எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* இரவு காவலர் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

* ஈப்பு காவலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

* அலுவலக உதவியாளர் பதவிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பதிவறை எழுத்தர் பதவிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

* இரவு காவலர் பதவிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

* ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: சிறப்பு முகாம்..!! ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க வேண்டுமா..? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Job in the Panchayat Department of Tamil Nadu.. Salary up to Rs.71,900..!!

Next Post

அன்புமணியை ராமதாஸ் நீக்கியது செல்லுமா? பாமகவில் அடுத்தது என்ன? உண்மையான அதிகாரம் யாருக்கு? பரபரப்பு தகவல்..

Thu Sep 11 , 2025
The question has arisen as to whether the announcement made by Ramadoss removing Anbumani from the PMK is valid. Let's see what legal experts have to say about this.
ramadoss anbumani

You May Like