தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு மைய அச்சகம், அரசு கிளை அச்சகம், வெளியூர் அலகுகள் என பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரம்:
- உதவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன் (Assistant Offset Machine Technician) – 19
- இளநிலை மின்வினைஞர் (Junior Electrician) – 14
- இளநிலை கம்மியர் (Junior Mechanic) – 22
- பிளம்பர் கம் எலெக்ட்ரீஷியன் (Plumber Cum Electrician) – 1
வயது வரம்பு: அரசுத் துறையில் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 01.07.2007 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் (OC): 32 வயது
பிசி (BC): 34 வயது
எம்பிசி/ டிஎன்சி (MBC/DNC): 34 வயது
எஸ்சி, எஸ்டி (SC/ST): 37 வயது
கல்வித்தகுதி:
தவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன்
- குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அச்சிடுதல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ அல்லது லித்தோ ஆஃப்செட் இயந்திரத்தில் தொழில்நுட்ப வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- டிப்ளமோ பெற்றவர்கள் குறைந்தது 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை மின்வினைஞர் (Junior Electrician)
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
- எலெக்ட்ரீஷியன் பயிற்சி சான்றிதழ் அல்லது தொழிற்பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை கம்மியர் (Junior Mechanic)
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
- மெக்கானிக்கலில் ஐடிஐ தொழிற்பயிற்சி அல்லது அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பிளம்பர் கம் எலெக்ட்ரீஷியன் (Plumber-cum-Electrician)
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
- பம்பிங் தொடர்பான ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்: எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு மாதம் நிலை 8 கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் நடைமுறை:
* விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் தொழில்நுட்பத் தகுதி அடிப்படையில் முதலில் தேர்வு செய்யப்படுவார்கள்.
* தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
* சான்றிதழ் சரிபார்ப்பிற்காக விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
* இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை சலுகைகள் வழக்கம்போல் பின்பற்றப்படும்.
* முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.stationeryprinting.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தபால் உறையின் மேல் “வேலைவாய்ப்பு விண்ணப்பம் – விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்” குறிப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர்,
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை,
ஆணையரகம்,
110, அண்ணா சாலை,
சென்னை – 2.
கடைசி தேதி: விண்ணப்பத்தை 19.09.2025 தேதி மாலை 5.30 மணிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.