Job: டிப்ளமோ, ITI படித்தவர்களுக்கு ஜாக்பாட்.. மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் வேலை.. லட்சத்தில் சம்பளம்..!

job

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்து மேம்படுத்தும் முக்கிய நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிலையில், DRDO-வில் காலியாக உள்ள சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் – பி (Senior Technical Assistant-B) மற்றும் டெக்னீஷியன் – ஏ (Technician-A) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.


காலிப்பணியிடங்கள் – 764

நிரப்பப்படும் பணியிடங்கள்:

சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் – பி பிரிவு: இந்தப் பிரிவில் ஆட்டோமொபைல் பொறியியல், கெமிக்கல் பொறியியல், வேதியியல், சிவில் பொறியியல், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த துறைகள், புவியியல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், நூலக அறிவியல், கணிதம், மெக்கானிக்கல் பொறியியல், உலோகவியல் பொறியியல், இயற்பியல் மற்றும் உளவியல் ஆகிய துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

டெக்னீஷியன் – ஏ பிரிவு: இந்தப் பிரிவில் புக் பைண்டர், கார்பெண்டர், சிஎன்சி ஆப்ரேட்டர், கணினி ஆப்ரேட்டர், வரைவாளர் (டிராஃட்ஸ்மேன்), எலெக்ட்ரிஷியன், எலெக்ட்ரானிக்ஸ், பிட்டர், மெக்கானிஸ்ட், ஆப்டிக்கல் ஊழியர், ரேடியோகிராபர், ஸீட் மெட்டல் ஊழியர், சர்வேயர், டர்னர் மற்றும் வெல்டர் ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

சம்பளம்:

  • சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் பதவிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • டெக்னீஷியன் பதவிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி, விண்ணப்பதார்களின் வயது வரம்பு 18 முதல் 28 வரை இருக்கலாம். வயது வரம்பில் தளர்வு பின்பற்றப்படும்.

கல்வித்தகுதி:

சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் – பி: இந்தப் பதவிக்கு அந்தந்த பொறியியல் துறைகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் புவியியல், நூலக அறிவியல், கணிதம், இயற்பியல் மற்றும் உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

டெக்னீஷியன் – ஏ: இந்தப் பதவிக்கு 10-ம் வகுப்பு முடித்த பின்னர், அந்தந்த தொழில் பிரிவுகளில் ஐடிஐ (ITI) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு 2 கட்டத் தேர்வு முறை பின்பற்றப்பட உள்ளது.

முதல் கட்டத் தேர்வு (Tier–I): இது தகுதித் தேர்வாக (Qualifying Test) நடத்தப்படும். கணினி வழியில் நடைபெறும் இந்தத் தேர்வில் 150 கேள்விகள், 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வு நேரம் 120 நிமிடங்கள் ஆகும்.

இரண்டாம் கட்டத் தேர்வு (Tier–II): முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு, பதவிக்கான முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வும் கணினி வழியிலேயே நடைபெறும். இதில் 120 கேள்விகள், 120 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வு நேரம் 90 நிமிடங்கள் ஆகும்.

டெக்னீஷியன் – ஏ பதவிக்கு:

  • இரண்டு கட்டத் தேர்வுகளுக்கு கூடுதலாக, திறன் தேர்வு (Skill Test) நடத்தப்படும்.
  • முழுமையாக கணினி அடிப்படையில் நடைபெறும் இந்தத் தேர்வு முறையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எப்படி விண்ணப்பிப்பது? டிஆர்டிஓ பணிக்கு விண்ணப்பிக்க https://drdo.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.01.2026.

Read more: குளிர்காலத்தில் முடி உதிர்வால் கவலையா..? கூந்தலை பாதுகாக்க இதோ சில மேஜிக் டிப்ஸ்..!!

English Summary

Job: Jackpot for diploma and ITI graduates.. Job at the central government’s DRDO organization.. Salary in lakhs..!

Next Post

Flash : காலையிலேயே ஷாக்..! இன்றும் புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை..! தங்கம் விலையும் அதிரடி உயர்வு..!

Thu Dec 18 , 2025
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே அதிரடியாக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி […]
gold jewelry reflective surface 640852 1749

You May Like