தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு திருச்சியில் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (BHEL) நிறுவனத்தில் மத்திய அரசின் பொதுத்துறை தொழிற்பயிற்சி வாய்ப்பு காத்திருக்கிறது. மொத்தம் 760 இடங்கள் இங்கே நிரப்பப்பட உள்ளன, இதில் பட்டதாரிகள், டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் பயிற்சி பெறலாம்.
பணியிட விவரம்:
- ஐடிஐ பிரிவில் – 550 பணியிடங்கள்,
- டிப்ளமோ பிரிவில் – 90 பணியிடங்கள்,
- பட்டப்படிப்பு தகுதி பிரிவில் – பணியிடங்கள் என மொத்தம் 760 காலிப்பணியிடங்கள்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி:
* Trade அப்ரண்டிஸ்: பள்ளி படிப்பிற்கு பின்னர், அந்தந்த பிரிவுகளில் ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
* டெக்னீஷியன் அப்ரண்டிஸ்: அந்தந்த பாடப்பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* பட்டப்படிப்பு அப்ரண்டிஸ்: அந்தந்த பொறியியல் பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* HR உதவியாளர்: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.A முடித்திருக்க வேண்டும்.
* முழு நேர கல்வியில் படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம், தொலைத்தூர கல்வியில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
உதவித்தொகை:
Trade அப்ரண்டிஸ் (ஐடிஐ தகுதி): தொழிற்பயிற்சி விதிமுறைகளின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும்.
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (டிப்ளமோ தகுதி): மாதம் ₹11,000 உதவித்தொகை.
பட்டப்படிப்பு அப்ரண்டிஸ்: மாதம் ₹12,000 உதவித்தொகை.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பதார்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி? ஐடிஐ தகுதி பெற்றவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்திலும், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தகுதி உள்ளவர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, https://trichy.bhel.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: செப்டம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.