Job | அரசு மருத்துவமனைகளில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! ரூ.1,77,500 லட்சம் வரை சம்பளம்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 பொது மருத்துவர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் 37 மருத்துவமனைகளும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் 303 மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன. இவை தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. இதில், தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள், மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளியாக தங்கியும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால், நாளுக்குநாள் மக்களின் கூட்டமும் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லாத நிலையே இருக்கிறது. இதனால், மருத்துவர்களுக்கு பணிநெருக்கடி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2,553 பொது மருத்துவர் காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்பக்கோரி பல ஆண்டுகளாக மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த காலியிடங்களை தற்காலிகமான முறையில் நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்கான அறிவிப்பையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 சம்பளமாக வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் WWW.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ”தமிழ்நாட்டில் இருந்து DMK ஆட்சியை தூக்கணும்”..!! கன்னியாகுமரியில் சூளுரைத்த பிரதமர் மோடி..!!

Chella

Next Post

மியான்மார் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை.! லாட்டரி கிங் மாட்டின் கடந்து வந்த பாதை.!

Fri Mar 15 , 2024
தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை வழங்கியது தொடர்பான விவரங்களை வாக்காளர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை எஸ்பிஐ வங்கியின் மூலம் செலுத்தப்பட்ட தேர்தல் பத்திர விபரங்களை அந்த வங்கி உச்சநீதிமன்றத்திடம் […]

You May Like