தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள ஹோமியோபதி உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் இப்பதவி நிரப்பப்படுகிறது.
பணியிட விவரம்:
உதவி மருத்துவ அதிகாரி (ஹோமியோபதி) – 2
வயது வரம்பு: ஹோமியோபதி மருத்துவர் பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, அதிகபடியான வயது வரம்பு 37 ஆகும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசி, பிடிஎம் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி:
- இப்பதவிக்கு F.F.Hom. (Lond)/M.F. Hom (Lond)/D.F. Hom (Lond) ஆகிய ஏதேனும் ஒரு பிஜி டிப்ளமோ (அல்லது)
- ஹோமியொபதி மருத்துவக் கல்லூரியில் பெற்ற டிப்ளமோ (அல்லது)
- ஹோமியோபதியில் ஒருங்கிணைந்த மருத்துவப் பாடத்தில் டிப்ளமோ (அல்லது)
- ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ சான்றிதழ் (அல்லது)
- அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் வழங்கும் ஹோமியோபதி மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை டிப்ளமோ (அல்லது)
- DHMS/BHMS பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதியை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும், விண்ணப்பதார்கள் தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சிலில் பதவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: தமிழ்நாடு மருத்துவப் பணி சேவையின் கீழ் நிரப்பப்படும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: உதவி ஹோமியோபதி மருத்துவர் பணியிடங்களுக்கு நேர்காணல் கிடையாது. ஒரே கட்ட எழுத்துத் தேர்வின் மூலம் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்பிற்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். ஆகஸ்ட் 28 வரை விண்ணப்பிக்கலாம்.
Read more: பிரிட்ஜில் வைத்த தண்ணீரை நேரடியாக குடித்தால் புற்றுநோய் வருமா..? – நிபுணர்கள் விளக்கம்