தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில், விரைவில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வாய்ப்பு பெறவுள்ளனர்.
கல்வித்தகுதி: முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு Ph.D, அல்லது UGC NET / SLET / SET ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், பொதுப் பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள், மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள் பெற்றிருப்பது போதுமானது.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி அதிகபட்சம் 57 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில், மற்றும் கல்வித் தகுதிகளை கருத்தில் கொண்டு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, அதற்கேற்ப https://tngasa.org/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை: விண்ணப்பதார்கள் விருப்பமான மாவட்டங்களை தேர்வு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.. விண்ணப்பிக்கும் பொது “Region / மண்டலம்” பட்டனை கிளிக் செய்து, Chennai, Coimbatore, Madurai, Dharmapuri, Thanjavur, Trichy, Thirunelveli Vellore இருந்து எந்த ஒரு மண்டலத்தையும் தேர்வு செய்யவும். மண்டலத்தைக் தேர்வு செய்த பிறகு, அதில் உள்ள மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து தெரிந்து கொள்ள, இணையதளத்தில் உள்ள ‘Vacancy Positions / காலிப் பணியிடங்கள்’ பகுதியில் சென்று, மாவட்ட வாரியான பணியிடங்களை சரிபார்க்கலாம்.
இது, நீங்கள் தேர்வு செய்யும் மாவட்டங்களில் பணியிட வாய்ப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும். பின்னர், தேர்ந்தெடுத்த மண்டலத்திலிருந்து அதிகபட்சமாக மூன்று மாவட்டங்களை தேர்வு செய்து “Submit / சமர்ப்பிக்க” பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பின், உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது எனக் குறிப்பு காண்பிக்கப்படும். இதற்கு பின்னர் தேர்வுக் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் ரூ.200 ஆகும். SC/ST பிரிவினருக்கு ரூ.100 மட்டுமே கட்டணமாகவே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.08.2025 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
Read more: டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழை உண்டா..? – வானிலை அப்டேட்