தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை..!! ரூ.63,000 வரை சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!!

தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் காலியாக உள்ள 58 கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்த ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேசான மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் வயதுவரம்பு 31.03.2023 அன்று 18 -27க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

இந்தப் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிகள் உண்டு. மேலும், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் 31.03.2023-க்குள் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, ‘ The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, chennai – 600 006 ஆகும்.

CHELLA

Next Post

ஸ்மார்ட் டிவி வாங்கப் போறீங்களா..? வெறும் ரூ.6,000 தான்..!! இதையும் கொஞ்சம் பார்த்துட்டு போங்க..!!

Wed Mar 8 , 2023
அமெரிக்காவைச் சேர்ந்த நுகர்வோர் மின்சாதன நிறுவனமான வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse), இந்திய சந்தையில் புதிதாக குவாண்டம் சீரிஸ் மற்றும் Pi சீரிஸ் பெயரில் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் குவாண்டம் சீரிஸ் 55 இன்ச் மாடலும், Pi சீரிசில் 24 இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்களும் இடம்பெற்றுள்ளன. வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் (24 இன்ச் HD டிவி மற்றும் 40 இன்ச் FHD டிவி) புதிய […]
ஸ்மார்ட் டிவி வாங்கப் போறீங்களா..? வெறும் ரூ.6,000 தான்..!! இதையும் கொஞ்சம் பார்த்துட்டு போங்க..!!

You May Like