அட, WWE சூப்பர் ஸ்டார் ‘ஜான் சினா’ இந்தப் பிரபல பாலிவுட் நடிகரின் ரசிகரா.!?! சுவாரசிய தகவல்.!

wwe சூப்பர் ஸ்டார் ஜான் சினா பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானின் மிக தீவிரமான ரசிகர் ஆவார். சமீபத்திய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் ஷாருக்கானின் ‘தில் தோ பாகல் ஹே’ பாடலைப் பாடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் .

wwe சூப்பர் ஸ்டார் ஜான் சினா, இந்தியாவின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ‘தில் தோ பாகல் ஹே’ திரைப்படத்தின் பாடலின் ஒரு சில வரிகளை பாடி மீண்டும் தொலைக்காட்சிகளின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார்.

இந்த வீடியோவில் ஜான் சினா சிரித்துக் கொண்டே அந்த பாடலின் முழு வரிகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன்பிறகு அவர் பாடலின் வரிகளை பாடத் தொடங்குகிறார். இந்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டாலும், தற்போது தான் வைரல் ஆகி இருக்கிறது. ஜான் சினா ஹிந்தியில் பாடுவதைக் கேட்ட பிறகு, ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை அடக்க முடியாமல் WWE நட்சத்திரத்திற்கான பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஜான் பெலிக்ஸ் ஆண்டனி சினா என்ற இயற்பெயர் கொண்ட ஜான் சினா அமெரிக்காவின் தொழில் முறை மல்யுத்த வீரர் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஆவார். இவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9, ஃப்ரீ லன்ஸ், பிளேயிங் வித் ஃபயர் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சில ராப் ஆல்பங்களையும் பாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் யாஸ் சோப்ரா இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் மாதுரி தீக்ஷித் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘தில் தோ பாகல் ஹே’ திரைப்படத்தின் பிரபலமான பாடலை தான் பாடி இருக்கிறார்.

English summary: WWE superstar John Cena, sings a Hindi song in an interview held in a National television show. He is also known to be an ardent fan of bollywood superstar Shahrukh Khan.

Read more: “ஊழலுக்கு டியூசன் எடுக்கலாம்.. நாடகம் நடத்தும் திமுக அரசு” – பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.! | Latest Tamil News – 1NewsNation

Next Post

இந்த நாடுகளில் 'UPI' மூலம் இந்தியர்கள் பணம் செலுத்தலாம்.!

Mon Feb 19 , 2024
UPI என்பது யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் ஆகும். இது டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது. இந்த முறையை பயன்படுத்தி செல்போனின் மூலமாக நாம் பேமெண்ட்கள் செய்வதற்கும் பணம் அனுப்புவதற்கும் உதவுகிறது. இந்த சேவையை கூகுள் பே பேடிஎம் அமேசான் பே போன்ற நிறுவனங்களின் செயலி மூலம் பயன்படுத்தலாம். யுபிஐ சேவையை நேஷனல் பேமன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் நிர்வாகித்து மற்றும் கண்காணித்து வருகிறது. உள்நாடுகளில் பணப்பரிவர்த்தனை மற்றும் […]

You May Like