பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமீபத்தில் அறிவித்தார்.. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் உறவு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. சமீபத்தில் ஜாய் தனது தரப்பு நியாயங்களை சமூக வலைத்தளங்களில் விளக்க தொடங்கிய பிறகு, பொதுமக்களின் கருத்து மாற தொடங்கியது. ரங்கராஜ் தனது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், தன்னுடன் 2 ஆண்டுகள் உறவில் இருந்ததாகவும், தான் இப்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னை மாதம்பட்டி தவிர்ப்பதாகவும், ஜாய் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜாய், தனது முதல் திருமண முறிவுக்கு பிறகு ரங்கராஜுடன் பழகியதாகவும், அவர் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும் புகார் அளித்துள்ளார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ள ஜாய், காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நீதி கோரியுள்ளார்..
மாதம்பட்டி ரங்கராஜும் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசல்டாவுக்கு தடை விதிக்கக் கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.. அவதூறாக ஜாய் கிரிசில்டா பேசிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர்.. அவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கிறார்கள்.. எனவே இந்த திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஜாய் கிறிசில்டாவின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி, ஸ்ருதி இது குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.