கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறந்துள்ள நிலையில், மாணவர்கள் விடுமுறைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வார இறுதி தவிர எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை. இதனால், மாணவர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆடி அமாவாசையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் ஜூலை 24ம் தேதி (புதன்கிழமை) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், முன்னோர்களை நினைவுகூரும் வழிபாடுகள், தர்ப்பணம், பிண்டம் ஆகியவை சிறப்பு இடங்களில், குறிப்பாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நடைபெறுவதால், மக்கள் பெருமளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படாது. சில தளர்வுகளின் அடிப்படையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Read more: நண்பேண்டா.. திடீரென ரஜினி உடன் சந்திப்பு.. கமல்ஹாசன் போட்ட நெகிழ்ச்சி பதிவு..