JUST IN | “இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க”..!! பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்..!!

vijay modi

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.


தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இத்தீர்மானத்தின் முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டிப் பிரதமருக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தொகுதி மறுவரையறை குறித்துத் தமிழக பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலித்து, அதற்கு ஏற்ப அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய அளவிலேயே (543 தொகுதிகள்) நிலையாக பராமரிக்க வேண்டும் என்றும், இந்த எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவைக்கும், கீழவையான மக்களவைக்கும் இடையிலான பிரதிநிதித்துவ விகிதாசாரத்தை 2.2 : 1 என்ற அளவிலேயே தொடரச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலிருந்தே உடனடியாக நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More : Watch Video | லாரியின் பின்புறம் சிக்கிக் கொண்ட கார்..!! தரதரவென இழுத்துச் சென்ற திக் திக் காட்சி..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!

Next Post

சமையலறையில் இந்த பொருட்கள் இருக்கா?… உடனே தூக்கி எறியுங்க!

Fri Aug 14 , 2026
வீட்டில் தினமும் அதிகம் பயன்படுத்தப்படும் இடங்களில் சமையலறையும் ஒன்று. உணவு தயாரிக்கும் இடம் என்பதால், அங்கு சுத்தம் மட்டுமல்லாமல் பாதுகாப்பும் முக்கியம். ஆனால் நீண்ட நாட்களாக பயன்படுத்திய சில பொருட்களை, அவை சேதமடைந்த பிறகும் பலர் மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இது உணவு சுகாதாரம் முதல் தீ விபத்து வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாகலாம். சமையலறையை அவ்வப்போது சுத்தம் செய்வதுடன், அங்கு இருக்கும் பொருட்களின் நிலையை சரிபார்த்து தேவையற்றவற்றை அகற்றுவதும் […]
kitchen n 1

You May Like