சேமிப்பு பழக்கம் என்பது வளமான எதிர்கால வாழ்க்கைக்கு போடும் முதல் அடித்தளம் ஆகும். ஆனால் நாம் பணத்தை முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதேவேளையில் நல்ல வட்டியுடன் திரும்ப கிடைக்க வேண்டும் என்று நினைப்போம். அந்த வகையில் மத்திய அரசின் அஞ்சல் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் கிசான் விகாஸ் பத்ரா திட்டமானது, சிறுசேமிப்பு திட்டங்களிலேயே வாடிக்கையாளர்களின் அதிக ஆதரவை பெற்றதாகும்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமே அதிக வட்டி விகிதம் தான். இந்த திட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சமாக ரூபாய் 200 போதும். அதிகபட்சமாக விருப்பப்பட்ட தொகையை நீங்கள் இந்த திட்டத்தில் சேமிக்க முடியும். 10 வருடங்களில், இரட்டிப்பு லாபத்துடன், முதலீடு செய்த தொகையை நீங்கள் பெறலாம். அதாவது ஒரு வருடத்திற்கு தொடர்ந்து தினமும் ரூ.200 முதலீடு செய்தால், 10 வருடத்துக்குள் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும்..
ஒரு வருடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.200 முதலீடு செய்தால், அந்த ஆண்டுக்கான மொத்த முதலீடு ரூ.73,000 (200 * 365) ஆகும். இரட்டிப்பு காலம் 115 மாதங்களில், வருடாந்திர வட்டி விகிதத்துடன் உங்கள் முதலீடு, 9 ஆண்டுகள், 7 மாதங்களில் ரூ.1,46,000 ஆக இரட்டிப்பாகும். பங்கு சந்தையில் காணப்படும் ஏற்ற தாழ்வுகளால் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இந்த திட்டத்திற்கு அரசாங்க உத்தரவாதமும் உண்டு.
கேவிபி விண்ணப்பம்: கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நீங்க இணைய வேண்டுமானால், அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு நேரில் அணுகி இணையலாம்.. ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ, கேவிபி விண்ணப்பப் படிவம் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். வயது வரம்பு எதுவுமே கிடையாது. ஒருவர் பெயரிலிருந்து இன்னொருவர் பெயருக்கு (நிபந்தனைக்குட்பட்டு), எத்தனை முறை வேண்டுமானாலும் கணக்கை மாற்றிக்கொள்ளவும் முடியும்.