‘நீதி வெல்லும்’ : கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் விஜய் பதிவு..

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறது.


இதனிடையே 41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை கரூர் சம்பவம் தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும் என்று தமிழக அரசு அனுமதி கோரியது.. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கினர்.. அனைத்து மனுக்கள் மற்றும் பிரமாண பத்திரத்தை பார்த்த பிறகு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்..

இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெக, பாஜக வழக்கறிஞர், பலியானவர்களின் உறவுகள் தாக்கல் செய்த 5 மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்தது. கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 2 ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்பதை தெளிவுப்படுத்திய உச்சநீதிமன்றம், தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. சென்னை உயர்நீதிமன்றம் எப்படி சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உத்தரவிட்டது என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தவெகவினர் கொண்டாடி வருகின்றனர்.. உண்மையும், நீதியும் விரைவில் வெளியே வரும் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.. அதே போல் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தீர்ப்பை வரவேற்றுள்ளன..

இந்த நிலையில் கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் ‘நீதி வெல்லும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Read More : “அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் தண்டிக்கப்படுவார்கள்..” சிபிஐ விசாரணைக்கு நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்..

English Summary

TVK leader Vijay has commented on the Supreme Court’s order to transfer the Karur case to the CBI.

RUPA

Next Post

Breaking : கரூர் வழக்கில் புது ட்விஸ்ட்.. ஒரு நபர் ஆணைய விசாரணை நிறுத்தி வைப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு!

Mon Oct 13 , 2025
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]
justice Aruna Jagatheesan one woman inquiry commission karur stampede 5 3

You May Like